Floating/Adjustable interest rate என்ற மாறக்கூடிய வட்டி விகிதத்தில் கடனைப் பெற்றால் ஏற்றத் தாழ்வுடன் (பெரும்பாலும் ஏற்றம் மட்டுமே) கூடிய மாதத் தவனையையே திரும்ப செலுத்த நேரிடும். இதனால் மாத சம்பளத்தையே நம்பியிருக்கும் நடுத்தர வர்க்கம் போடும் வீட்டிற்கான மாத budget-ட்டிலும் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வு ஏற்படும்.
இவ்வாறான பாதிப்பை தவிர்க்க, HDFC -யின் "Fixed First" திட்டம் ஒரு குறுகியக் கால வாய்ப்பினை வழங்குகிறது!
இந்த வசதியின்படி, கடன் பெறுவோர் கடனை திருப்பி செலுத்தும் ஆரம்பக் காலத்தில் 3 அல்லது 5 வருடங்களுக்கு நிலையான வட்டி விகிதத்தில் செலுத்தலாம். அதன் பின் வரும் காலங்களில், இந்தத் திட்டம் மாறக்கூடிய வட்டி விகிதத்தில் கடனை திருப்பி செலுத்தும் வகையில் தானாக மாறிவிடும்!
HDFC-யில் ஏற்கனவே இருக்கும் கடன் திட்டங்களில் இந்த "Fixed First" ஒரு புதிய சேர்க்கையாகும்.
இந்த திட்டம் கடனை திருப்பி செலுத்தும் ஆரம்பக் காலத்தில் வட்டி விகிதயேற்றதினால் பாதிப்பு அடையக் கூடாது என்று எண்ணும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
இந்த திட்டத்தில் பயனடைய தகுதி: வாடிக்கையாளர் 31, October'2011 அன்றோ அல்லது முன்னதாகவோ விண்ணப்பிக்கவேண்டும், மேலும் கடனில் முதல் தவணையை 30,November'2011 அன்றோ அல்லது முன்னதாகவோ பெறவேண்டும்.
HDFC “Fixed First” interest rate:
Applicable rates
|
Fixed Rates
|
|
(Monthly interest basis)
|
In (% pa)
|
|
3 year option
|
5 year option
|
|
Upto Rs. 30 lakhs
|
10.75
|
11.25
|
Rs. 30.01 lakhs to Rs. 75 lakhs
|
11.25
|
11.5
|
Over Rs. 75 lakhs
|
11.75
|
11.75
|
3 ஆண்டுக் காலத் திட்டத்தில், 30,November'2014 வரை நிலையான விட்டி விகிதத்தை பெறலாம்.
5 ஆண்டுக் காலத் திட்டத்தில், 30,November'2016 வரை நிலையான விட்டி விகிதத்தை பெறலாம்.
நிலையான வட்டி விகிதக் காலம் முடிந்த பிறகு, இந்தத் திட்டம் HDFC-யின் Retail Prime Lending Rate-உடன் இணைக்கப்பட்ட Adjustable Rate Home Loan (ARHL) திட்டத்திற்கு தானாக மாறிவிடும்.
"முதலீடுகள்!"-க்காக சதீஷ் குமார்

No comments:
Post a Comment