பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளும் அவை ஈட்டித்தரும் வருவாய் விகிதங்களும்: (Different investment options and their current market rate of returns)
உங்கள் முன்னால் பல வகையான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.முதலீட்டில் உங்களால் எந்த அளவுவரை நஷ்டங்களை தாங்கிக் கொள்ள முடியும், சூழ்நிலைகள்,எவ்வளவு காலம் முதலீட்டை வைத்திருக்க முடியும் என்பன போன்ற பலவற்றை ஆராய்ந்த பின்னரே உங்களுக்கேற்ற முதலீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். சந்தையின் நிலையற்ற தன்மையை உங்களால் எதிர்கொள்ள முடியும் என்றால் பங்குகளை (Shares) வாங்கலாம். பங்கு சந்தையின் நிலையற்ற தன்மையை தாங்கள் எதிர்கொள்ள விரும்பவில்லை என்றால், கொஞ்சம் வருமானம் வந்தால் போதும் என்று தாங்கள் விரும்பினால், தாங்கள் உறுதியாக வருவாய் அளிக்கக் கூடிய ஈட்டு வைப்பு தொகையை (Fixed income deposit) கணக்கில் கொள்ளலாம்.
இருப்பினும் தாங்கள் ஒன்றை மறக்கக் கூடாது. ஒவ்வொரு முதலீடும் எவ்வளவு அபாயங்களைக் கொண்டுள்ளதோ அதே அளவு வருவாய் ஈட்டித்தர வல்லவை.
பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றிய சுருக்கமான முன்னோட்டத்தை கீழே எழுதியுள்ளேன்:
பங்குகள் [Equities]:-
இருப்பினும் தாங்கள் ஒன்றை மறக்கக் கூடாது. ஒவ்வொரு முதலீடும் எவ்வளவு அபாயங்களைக் கொண்டுள்ளதோ அதே அளவு வருவாய் ஈட்டித்தர வல்லவை.
பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றிய சுருக்கமான முன்னோட்டத்தை கீழே எழுதியுள்ளேன்:
முதலீட்டு வாய்ப்புகள்:-
1. பங்குகள் [Equities]
2. கடன் பத்திரங்கள் [Bonds]
3. பரஸ்பர நிதிகள் [Mutual Funds]
4. ஈட்டு வைப்புத் தொகை [Fixed Deposit] மற்றும் பல.,
பங்குகள் [Equities]:-
நிறுவனங்கள் புதிதாக சந்தையில் நுழையும் பொது அவற்றின் பங்குகளை IPO-Initial Public Offer எனப்படும் முதன்நிலை சந்தையில் (Primary Market) வாங்கலாம். பங்கு சந்தைகள் பங்குகளை பரிமாற்றிக் கொள்ளும் இடங்களாக (Exchanges) செயல்படுகின்றன. இவற்றை இரண்டாம் நிலை சந்தைகள் (Secondary markets) என அழைக்கப்படுகின்றன. இங்கு நாம் பங்குகளை வாங்கவும் விற்கவும் முடிகிறது.
சந்தையின் நிலையற்ற தன்மை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் வீழ்ச்சிகளின் அபாயங்களும் இரு விஷயங்களால் மட்டுபடுகின்றன.
அவை,
1. நாட்டின் பொருளாதாரம் பொதுவாக மேல் நோக்கி செல்வது.
2. முதலீட்டை நீண்ட கால அடிப்படையில் மேற்கொள்வது.
இவ்வகை முதலீடு இரு வழிகளில் வருமானத்தை ஈட்டக் கூடியது.
1. லாபப் பங்கீடு (Dividend): நிறுவனத்தின் லாபத்தில் இருந்து அவ்வப்போது முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து வழங்கப்படுவது லாபப் பங்கீடு எனப்படும்.
2. பங்கின் சந்தை விலை அந்த நிறுவனத்தின் வளர்ச்சி அறிவிக்கப்படும் பொது அதற்கு ஏற்றார் போல் உயரும். இதன் மூலம் முதலீட்டாளர்களின் பணத்தின் மதிப்பும் உயரும். இதன் மூலம் முதலீட்டாளர்களின் பணத்தின் மதிப்பும் உயரும் (Capital Gain).
சராசரியாக இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பங்குகளின் மீதான முதலீடுகள் ஆண்டுக்கு 25% வருவாய் ஈட்டுகின்றன. பங்குகளை வாங்கி விற்கும் பொது துள்ளியமான முடிவுகளை எடுப்பதன் மூலம் ஆண்டுக்கு ஈட்டு வருமானமாக 40% கூட பெறமுடியும்.
அடுத்த Blog - ல் கடன் பத்திரங்களை [Bonds] பற்றி பார்ப்போம்!