Sunday, October 9, 2011

இந்த தீபாவளிக்கு நீங்க எப்படி செலவு செய்யப்போறீங்க?

வேண்டாம்!

அருமையான சலுகை உங்களுக்கு தற்சமயம் இந்த தீபாவளி காலத்தில் தேவை இல்லா பொருட்களுக்கோ அல்லது சேவைகளுக்கோ கிடைத்தால்?

"வேண்டாம்"

என்று தான் நீங்கள் சொல்ல பழகிக்கொள்ள வேண்டும்!

இதனை என் அறிவுரையாக தாங்கள் பெரு மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்!

இவ்வாறான சலுகைகளை பற்றி நீங்கள் கவலைப்படத் தேவை இல்லை. இந்த தீபாவளிக்கான அணைத்து செலவுகளையும் முடித்தபின் உங்கள் சிறு/தொடர் சேமிப்புகள் கலையாமல் இருக்கவே தாங்கள் கவலைப்பட வேண்டும்.

நான் இதை சொல்வதற்கு காரணங்கள் ஒன்றும் புதிதல்ல. ஆம், மீண்டும் விலைவாசி, உயர்ந்த வட்டிவிகிதங்கள் மற்றும் சிறு சேமிப்பு ஆகியவை பற்றி தான் சொல்கிறேன். இவை மூன்றையும் நீங்கள் மறக்கவில்லை என்றால் நீங்கள் Credit Card -ஐ ஆடம்பரத்திற்கு செலவழிக்க மாட்டீர்கள்.

1. விலைவாசி
          தேவை இல்லா செலவுகளை தவிர்த்தாலே விலைவாசியை ஓரளவு சமாளித்து விடலாம். ஆனால், தேவையில்லா செலவுகள் நம் Budget -ல் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்த வாய்ப்புள்ளது, பெரிய தாக்கம் "அவசர செலவுகளால்" தான் ஏற்ப்படும்.
           புரிகிறதா? நம்மை செலவு செய்ய தூண்டும் வகையில் செய்யப்படும் இலவசம்/தள்ளுபடி/சலுகை விளம்பரங்களால் நாம் சம்பாரித்த ஆயிரங்களை சில நிமிடங்களில் செலவாகலாம். இது தான் "அவசர செலவு" (Impulse Buying). உணர்ச்சிவசபட கூடியவர்கள் இதற்காக Credit Card பயன்படுத்த தயங்க மாட்டார்கள். அடுத்த மாத Budget -ல் துண்டு விழும்போது மேலும் உணர்ச்சிவசப்படுவர்.
          
2. உயர்ந்த வட்டிவிகிதங்கள்
          நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே 12  முறை வங்கிகளுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன. இதனால் Credit Card செலவுகளுக்கும் வட்டி ஏற்றப்பட்டிருகிறது.  
          ஆக இனி Credit Card மூலம் "அவசர செலவுகளை" தவிர்த்தாக வேண்டும். இல்லையெனில் செலவு செய்ததற்காக மேலும் பெரிய செலவு செய்ய நேரிடும். இதுவும் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறன்.

3. சிறு/தொடர் சேமிப்பு
          உயர்ந்த வட்டிவிகிதங்கள் நிலவும் இந்த காலக்கட்டத்தில் வங்கிகளில் கடன் வாங்குவதற்கு நீங்கள் மிகவும் சிந்திக்க வேண்டும். இல்லை எனில், நடுக்கடலில் உங்கள் குடும்பத்தினருடன் ஓட்டை விழுந்த படகில் ஓட்டையை அடைத்து படகை செலுத்தி கரையை சேர்வதற்காக நீங்கள் மிகுந்த நேரம் கடின உழைப்பைப் போட நேரிடுவதை போன்ற நினை தான் உயர்ந்த வட்டியில் வாங்கிய கடனை திரும்பி செலுத்தும்  போதும் உண்டாகும்.
          மாறாக, பெரும்பாலும் கடனை தவிர்த்து உயர்ந்த வட்டிவிகிதங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள சேமிப்பை உயர்த்திக் கொள்ளலாம். பிற்காலத்தில் உங்களுக்கு பெருமளவு வட்டியும் கிடைக்கும். மேலும் இந்த சேமிப்பை தொடர் சேமிப்பாக மேற்கொள்ளும் பொது உங்கள் சேமிப்பு Snowball Effect (பனி மலையில் உருண்டு கீழே வரும் போது தன் உருவத்தையும் எடையையும் மிக விரைவாக பெருக்கி கொள்ளும்) அடிப்படையில் பன்மடங்கு பெருகும். 

 தாங்கள் செலவே செய்ய வேண்டாம் என்று நான் சொல்ல மாட்டேன். நீங்கள் செலவு செய்யும் முறையை சீர்த்திருத்த எண்ணுங்கள். நீங்கள் செய்யும் செலவுகளால் உங்கள் பணம், வணிகர்களுக்கு எளிதில் லாபம் ஈட்டித்தருவதை விட உங்கள் அன்பு குடும்ப உறுப்பினர்களுக்கு உங்கள் பாசம் வெளிப்பட்டு குடும்ப ஒற்றுமை மேலும் அழகுற செய்யட்டும்.

 உங்களுக்காக எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 

"முதலீடுகள்" -க்காக சதீஷ் குமார்