Sunday, October 9, 2011

இந்த தீபாவளிக்கு நீங்க எப்படி செலவு செய்யப்போறீங்க?

வேண்டாம்!

அருமையான சலுகை உங்களுக்கு தற்சமயம் இந்த தீபாவளி காலத்தில் தேவை இல்லா பொருட்களுக்கோ அல்லது சேவைகளுக்கோ கிடைத்தால்?

"வேண்டாம்"

என்று தான் நீங்கள் சொல்ல பழகிக்கொள்ள வேண்டும்!

இதனை என் அறிவுரையாக தாங்கள் பெரு மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்!

இவ்வாறான சலுகைகளை பற்றி நீங்கள் கவலைப்படத் தேவை இல்லை. இந்த தீபாவளிக்கான அணைத்து செலவுகளையும் முடித்தபின் உங்கள் சிறு/தொடர் சேமிப்புகள் கலையாமல் இருக்கவே தாங்கள் கவலைப்பட வேண்டும்.

நான் இதை சொல்வதற்கு காரணங்கள் ஒன்றும் புதிதல்ல. ஆம், மீண்டும் விலைவாசி, உயர்ந்த வட்டிவிகிதங்கள் மற்றும் சிறு சேமிப்பு ஆகியவை பற்றி தான் சொல்கிறேன். இவை மூன்றையும் நீங்கள் மறக்கவில்லை என்றால் நீங்கள் Credit Card -ஐ ஆடம்பரத்திற்கு செலவழிக்க மாட்டீர்கள்.

1. விலைவாசி
          தேவை இல்லா செலவுகளை தவிர்த்தாலே விலைவாசியை ஓரளவு சமாளித்து விடலாம். ஆனால், தேவையில்லா செலவுகள் நம் Budget -ல் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்த வாய்ப்புள்ளது, பெரிய தாக்கம் "அவசர செலவுகளால்" தான் ஏற்ப்படும்.
           புரிகிறதா? நம்மை செலவு செய்ய தூண்டும் வகையில் செய்யப்படும் இலவசம்/தள்ளுபடி/சலுகை விளம்பரங்களால் நாம் சம்பாரித்த ஆயிரங்களை சில நிமிடங்களில் செலவாகலாம். இது தான் "அவசர செலவு" (Impulse Buying). உணர்ச்சிவசபட கூடியவர்கள் இதற்காக Credit Card பயன்படுத்த தயங்க மாட்டார்கள். அடுத்த மாத Budget -ல் துண்டு விழும்போது மேலும் உணர்ச்சிவசப்படுவர்.
          
2. உயர்ந்த வட்டிவிகிதங்கள்
          நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே 12  முறை வங்கிகளுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன. இதனால் Credit Card செலவுகளுக்கும் வட்டி ஏற்றப்பட்டிருகிறது.  
          ஆக இனி Credit Card மூலம் "அவசர செலவுகளை" தவிர்த்தாக வேண்டும். இல்லையெனில் செலவு செய்ததற்காக மேலும் பெரிய செலவு செய்ய நேரிடும். இதுவும் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறன்.

3. சிறு/தொடர் சேமிப்பு
          உயர்ந்த வட்டிவிகிதங்கள் நிலவும் இந்த காலக்கட்டத்தில் வங்கிகளில் கடன் வாங்குவதற்கு நீங்கள் மிகவும் சிந்திக்க வேண்டும். இல்லை எனில், நடுக்கடலில் உங்கள் குடும்பத்தினருடன் ஓட்டை விழுந்த படகில் ஓட்டையை அடைத்து படகை செலுத்தி கரையை சேர்வதற்காக நீங்கள் மிகுந்த நேரம் கடின உழைப்பைப் போட நேரிடுவதை போன்ற நினை தான் உயர்ந்த வட்டியில் வாங்கிய கடனை திரும்பி செலுத்தும்  போதும் உண்டாகும்.
          மாறாக, பெரும்பாலும் கடனை தவிர்த்து உயர்ந்த வட்டிவிகிதங்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள சேமிப்பை உயர்த்திக் கொள்ளலாம். பிற்காலத்தில் உங்களுக்கு பெருமளவு வட்டியும் கிடைக்கும். மேலும் இந்த சேமிப்பை தொடர் சேமிப்பாக மேற்கொள்ளும் பொது உங்கள் சேமிப்பு Snowball Effect (பனி மலையில் உருண்டு கீழே வரும் போது தன் உருவத்தையும் எடையையும் மிக விரைவாக பெருக்கி கொள்ளும்) அடிப்படையில் பன்மடங்கு பெருகும். 

 தாங்கள் செலவே செய்ய வேண்டாம் என்று நான் சொல்ல மாட்டேன். நீங்கள் செலவு செய்யும் முறையை சீர்த்திருத்த எண்ணுங்கள். நீங்கள் செய்யும் செலவுகளால் உங்கள் பணம், வணிகர்களுக்கு எளிதில் லாபம் ஈட்டித்தருவதை விட உங்கள் அன்பு குடும்ப உறுப்பினர்களுக்கு உங்கள் பாசம் வெளிப்பட்டு குடும்ப ஒற்றுமை மேலும் அழகுற செய்யட்டும்.

 உங்களுக்காக எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 

"முதலீடுகள்" -க்காக சதீஷ் குமார் 


  

Friday, September 16, 2011

தமிழ்நாட்டில் இனி Petrol ரூ.70.05/lt.







Petrol prices in India are costlier than the US but cheaper than European countries, Minister of State for Petroleum and Natural Gas R P N Singh said in New Delhi. 

Petrol in Delhi is priced at Rs 63.70 a litre, while the same in USA is priced at Rs 42.82 per litre. The price in India is more than any of its neighbours -- Pakistan (Rs 41.81 a litre), Sri Lanka (Rs 50.30 per litre), Bangladesh (Rs 44.80 a litre) and Nepal (Rs 63.24 per litre).

But the rate in Delhi is cheaper than France (Rs 94.97 per litre), Germany (Rs 95.99 a litre), the United Kingdom (Rs 96.39 per litre) and Italy (Rs 96.79 a litre), he said in a written reply to a question in the Rajya Sabha.

இந்த Petrol விலை ரொம்ப குழப்பமான விஷயம். அதுவும் இந்தியால ரொம்பவே பெரிய குழப்பமான விஷயம். 

159 liters of Crude Oil = 73.8 liters of Petrol + LPG,Diesel,Kerosene,Jet Fuels + petrochemicals
1 Barrel = $ 110 USD
1 US Dollar = 47 Rupees
1 Barrel = Rs.5170/-

மேல் கூறிய அடிப்படைகளின்படி கணக்கிட்ட பின் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகளையும் மத்திய அரசின் வரிகள் மற்றும் மாநில அரசின் வரிகள் ஆகியவற்றை சேர்த்தால் தலை சுற்றுகிறது!

அடிக்கடி Petrol விலை ஏறுவதற்கு பல காரணங்கள் ஒன்று சேருகின்றன!

முதல் காரணம், மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கி வந்த மானியத்தை நிறுத்திவிட்டு, மேலும் எண்ணெய் நிறுவனங்களை Petrol, LPG & Jet Fuel போன்றவற்றிற்கு விலை நிர்ணயம் செய்ய உரிமை வழங்கியதும்தான். 

கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தினால் Petrol விலை ஏறுகிறது என்று சொல்லப்படும் காரணம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்! முன்பெல்லாம் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் போது, அரசு இந்த விலை ஏற்றங்கள் மக்களை பாதிக்காமல் இருக்க Petrol மற்றும் LPG -க்காக மான்யம் வழங்கி வந்தது. சமீபக் காலமாக இல்லை.

 மூன்றாவது காரணம், "அரசு ஏன் இந்த மானியத்தை நிறுத்திவிட்டு எண்ணெய் நிறுவனங்களை  விலை நிர்ணயம் செய்ய சொன்னது?" என்ற கேள்விக்கான பதில்தான். அரசுக்கு Petrol மற்றும் மற்ற எரி பொருள்கள் மூலமான வர்த்தகத்தில் கிடைக்கும் வருவாய் பெரியது, மிகப் பெரியது! இந்த வருவாயை அரசு குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. அப்படி விரும்பி இருந்தால், மானியத்தை நிறுத்திய அரசு, Petrol போன்ற எரிப் பொருள்கள் மிதான ஏகப்படியான வரிகளையாவது குறைத்திருக்கும். 

நான்காவது காரணம், அரசுக்கு இந்த வருவாய் மிக முக்கியமானது. அடுத்த 20 வருடங்களில் இந்தியாவின் உட்கட்டமைப்பை உயர்த்த வருடத்திற்கு ரூ.75000 கொடிகள் (மொத்தம் 15,00,000 கோடிகள்) செலவு செய்யப்படும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மத்திய அமைச்சர் C.P.Joshi அவர்கள் கூறியிருக்கிறார். இந்த வருடத்திற்கு இதுவரை ரூ.21,000 கோடிகள் செலவு செய்யப்பட்டிருக்கிறது. தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய இந்த செலவிற்கு நிதியை சமாளிக்க, அரசுக்கு தன் வருவாய்களை குறைத்துக்கொள்ள விருப்பமில்லை.


ஐந்தாவது காரணம், இந்தியாவின் பெரிய பலவீனம் மோசமான உட்கட்டமைப்புதான். உலகின் அடுத்த வல்லரசாக இடம் பிடிக்க இந்தியாவும் சீனாவும் மிகக் கடுமையான போட்டியில் இருக்கின்றன, ஏன்? வெளிநாட்டு முதலீடுகளை தன் வசம் ஈர்க்க இரு நாடுகளும் விரும்புவதால்தான். சீனா முன்னிலையில் இருப்பதால், உட்கட்டமைப்பை வெகுவிரைவாக உயர்த்த இந்திய அரசு முனைப்புடன் இருக்கிறது. இதற்காக எந்த சமரசத்திற்கும் இடமில்லை. 

மேல் கூறப்பட்ட காரணங்களை கவனித்தீர்களா?

ஆக இனி Petrol மற்றும் LPG  விலை குறைய வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறதல்லவா?. 

20 ஆண்டுகளில் உட்கட்டமைப்புகள் உயர்ந்தபின் அவற்றை அனுபவிக்க யார் இருப்பர்?

ஏற்கனவே சாதாரண மக்கள் விலைவாசி, கடன்களுக்கான வட்டி உயர்வு போன்ற கடினமான சூழ்நிலையில் வாழ்க்கையை சோர்வுடன் தள்ளிக்கொண்டு இருகிறார்கள். தங்களது சேமிப்புகளைக் குறைத்துக் கொண்டு வருகிறார்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்கும் இந்த நிலை தொடர்ந்தாள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தொகை உயரக் கூடும்.

"முதலீடுகள்" -யின் கருத்து:

இனி வரும் வருடங்களில் Petrol -லில் உங்கள் பணத்தை எரித்து சேமிப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டாம். Petrol -லை வசதிக்காக பயன்படுத்தி கரியாக்க வேண்டாம். முடிந்த வரையிலும் மற்றவர்களுக்கு "லிப்ட்" கொடுங்கள். Car ஓட்டுனர்கள் "Car Pooling" செய்ய முன்வாருங்கள். 


மக்கள் இனி பேருந்துகளில் நெரிசலைத் தவிர்க்க மற்ற வாகனங்களில் தயங்காமல் லிப்ட் கேட்கலாம். இல்லையென்றால் Cycle-லை தூசித்தட்டி தயார்ப்படுத்தலாம்.    

"முதலீடுகள்" -க்காக சதீஷ் குமார் 






Wednesday, September 7, 2011

RBI வீட்டுக் கடனுக்கான Prepayment Charges -ஐ ரத்து செய்தது!

மாறும் வட்டி விகிதத்துடன் கூடிய வீட்டு கடன்கள் இனி கூடுதல் கட்டணங்கள் இன்றி முன்முடிக்கலாம்! (Foreclosure charges to be withdrawn for home loans borrowed from banks!). 

தாங்கள் தங்களிடம் உள்ள பங்குகளை பங்கு சந்தையில் விற்றோ, வேறு சொத்துக்களை விற்றோ அல்லது அலுவலகத்தில் Bonus பெற்றாலோ அந்த பெரிய தொகையை வைத்து முதலில் வீட்டுக் கடனை முடித்து விடலாம் என்று தான் நினைப்பீர்கள். அனால் நீங்கள் கடன் வாங்கிய வங்கிக்கு சென்று கேட்டால் மொத்த கடன் தொகையில் வட்டியை தவிர மீதமுள்ள முதல் எவ்வளவு இருக்கிறதோ அதில் 2% (Foreclosure/Prepayment charge) முன்முடிப்புக் கட்டணமாக செலுத்தவேண்டும் என்பார்கள். கடனாளிக்கு கடனை முடித்துக் கொள்ள இது பெரும் சங்கடமாகவே இருக்கும்.

நேற்று (06.09.2011) நடந்த  வங்கிகளின்  வாடிக்கையாளர் குறைத் தீர்க்கும்  மாநாட்டில்  (Banking Ombudsman Conference) வாடிக்கையாளர்  சேவையை  துரிதப்படுத்த பத்து செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன.


அதில் ஒன்று தான் முன்முடிப்புக் கட்டணத்தை மாறும் வட்டிவிகிதத்துடன் கூடிய வீட்டு கடன்களுக்கு ரத்து செய்ய வேண்டும் என்று RBI வங்கிகளுக்குக் கூறியிருப்பது. 

RBI -யின் இந்த நன்செயளுக்கு முன்னோடியாய் இருந்தது Axis Bank தான். Axis Bank மற்ற வங்கிகளின் போட்டியை சமாளிக்க தனது floating rate home loan- ல் prepayment (foreclosure) charge- ஐ ரத்து (௦%) செய்ததே, RBI- யின் இந்த முடிவிற்கு வித்திட்டது என்றே சொல்லவேண்டும்.

இதில் RBI- யின் கருத்து:

          "Foreclosure/Prepayment charges கடனாளிகளையும் மற்றும் வங்கிகளின் ஆக்கப்பூர்வமான போட்டியையும் பாதிக்கிறது". 

ஆனால் நிலையான வட்டிவிகிதத்துடன் கூடிய வீட்டு கடன்களில் (Fixed Rate Home Loans) முன்முடிப்புக் கட்டணம் வசூலிப்பது தொடரும். அதனால் மாறும் வட்டிவிகிதத்தில் இருந்து நிலையான வட்டிவிகிதத்திற்கு வாடிக்கையாளர் இனி மாறும் போதும் (Interest Rate-Swap from Floating to Fixed Rate) முன்முடிப்பிற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

"முதலீடுகள்" கருத்து: 

           இன்னும் ஓரிரு ஆண்டுகளில் RBI -யின் வட்டிவிகிதங்கள் குறைய இருப்பதால், வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்க எண்ணிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் கீழ் உள்ள வாய்ப்புகளை கவனிக்கவும்!

1. வீட்டுக் கடனை Floating rate -யின் அடிப்படையிலேயே வாங்கவும். தற்போதுள்ள அதிக வட்டிவிகிதங்களில் Fixed Rate -யில் கடனை வாங்கினால், ஓரிரு ஆண்டுகளில் வட்டிவிகிதல் குறையும் போதும் அதிக விகிதத்தில் வட்டியை கட்டவேண்டியிருக்கும்.

2. இப்பொழுது RBI வங்கிகளை Floating rate home loan -களில் முன்முடிப்பு செய்யும் போது Prepayment/Foreclosure charges வசூலிக்கக் கூடாது என்று சொல்லியிருப்பதால், இனி நீங்கள் Prepayment/Foreclosure அதாவது தவணைக் காலம் முடிவதற்கு முன்னரே கடனை முழுமையாக செலுத்தும் போது எந்த சங்கடங்களும் இருக்காது.


     ICICI Bank வழங்கும் இரு வேறு வட்டி விகிதங்களைக் கொண்ட கடன் திட்டத்தை பார்க்கும் போது இந்த கடன் திட்டம் முதல் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு Fixed rate -ஆகவும் அதன் பிறகு Floating rate -ஆகவும் மாறிவிடுகிறது. இதனால் RBI வட்டிவிகிதங்களை குறைக்கும் காலங்களில் இந்த கடன் திட்டம் Floating rate -ஆக மாறி தானாக வட்டியைக் குறைத்து உங்களுக்கு பயனளிக்கும்.


     HDFC Bank அளிக்கும் 'Fixed First' திட்டம் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு Fixed rate அளித்த பிறகு Floating rate -ஆக மாறக்கூடியது. இந்த திட்டம் 31,October'2011 வரை மட்டுமே கிடைக்கும்.

     இருப்பினும் அவசரப்பட வேண்டாம். சாதாரண Floating rate திட்டத்தையே  நீங்கள் நாடலாம்.

     நன்கு ஆராய்ந்த பின் கடனைப் பெற்று உங்கள் கனவு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். "முதலீடுகள்" வாழ்த்துகிறது!

"முதலீடுகள்" -க்காக சதீஷ் குமார் 




Monday, September 5, 2011

HDFC-யின் புதிய வீட்டுக் கடன் திட்டம்

Floating/Adjustable interest rate என்ற மாறக்கூடிய வட்டி விகிதத்தில் கடனைப் பெற்றால் ஏற்றத் தாழ்வுடன் (பெரும்பாலும் ஏற்றம் மட்டுமே) கூடிய மாதத் தவனையையே  திரும்ப செலுத்த நேரிடும். இதனால் மாத சம்பளத்தையே நம்பியிருக்கும் நடுத்தர வர்க்கம் போடும் வீட்டிற்கான மாத budget-ட்டிலும் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வு ஏற்படும். 

இவ்வாறான பாதிப்பை தவிர்க்க, HDFC -யின் "Fixed First" திட்டம் ஒரு குறுகியக் கால வாய்ப்பினை வழங்குகிறது!


HDFC  "Fixed First" என்ற புதிய வீட்டு கடன் வசதியை இன்று அறிமுகம் செய்துள்ளது!

இந்த வசதியின்படி, கடன் பெறுவோர் கடனை திருப்பி செலுத்தும் ஆரம்பக் காலத்தில் 3 அல்லது 5 வருடங்களுக்கு நிலையான வட்டி விகிதத்தில் செலுத்தலாம். அதன் பின் வரும் காலங்களில், இந்தத் திட்டம் மாறக்கூடிய வட்டி விகிதத்தில் கடனை திருப்பி செலுத்தும் வகையில் தானாக மாறிவிடும்!

HDFC-யில் ஏற்கனவே இருக்கும் கடன் திட்டங்களில் இந்த "Fixed First" ஒரு புதிய சேர்க்கையாகும்.

இந்த திட்டம் கடனை திருப்பி செலுத்தும் ஆரம்பக் காலத்தில் வட்டி விகிதயேற்றதினால் பாதிப்பு அடையக் கூடாது என்று எண்ணும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.

இந்த திட்டத்தில் பயனடைய தகுதி: வாடிக்கையாளர் 31, October'2011 அன்றோ அல்லது முன்னதாகவோ விண்ணப்பிக்கவேண்டும், மேலும் கடனில் முதல் தவணையை 30,November'2011 அன்றோ அல்லது முன்னதாகவோ பெறவேண்டும்.

HDFC “Fixed First” interest rate:
Applicable rates
Fixed Rates

(Monthly interest basis)
In (% pa)


3 year option
5 year option
Upto Rs. 30 lakhs
10.75
11.25
Rs. 30.01 lakhs to Rs. 75 lakhs
11.25
11.5
Over Rs. 75 lakhs
11.75
11.75

3 ஆண்டுக் காலத் திட்டத்தில், 30,November'2014 வரை நிலையான விட்டி விகிதத்தை பெறலாம்.

5 ஆண்டுக் காலத் திட்டத்தில், 30,November'2016 வரை நிலையான விட்டி விகிதத்தை பெறலாம்.

நிலையான வட்டி விகிதக் காலம் முடிந்த பிறகு, இந்தத் திட்டம் HDFC-யின் Retail Prime Lending Rate-உடன் இணைக்கப்பட்ட Adjustable Rate Home Loan (ARHL) திட்டத்திற்கு தானாக மாறிவிடும்.

 "முதலீடுகள்!"-க்காக சதீஷ் குமார் 

  

Monday, August 8, 2011

Silver-ல முதலீடு செய்யனும்னு  யோசிச்சிங்களா?

     இத்தனை வருடங்கள் இல்லாம இப்போது ஏன் வெள்ளி மீது முதலீடு செய்ய வேண்டும் என்று நீங்க கேட்டா, அதற்கு பதில் :-

     சமீப காலமாக வெள்ளி மீதான முதலீடு ஆர்வம் வரலாறு காணாத அளவு பெருகியுள்ளது. அதாவது இந்திய  ரூபாயின் அடிப்படையில் வெள்ளியின் விலை பன்மடங்கு ஏற்றம் கண்டு வருகிறது. ( இருப்பினும் அமெரிக்க டாலரின் அடிப்படையில் இல்லை). அதிக விலை ஏற்றங்கள்  காணும் விலை மதிப்பு மிக்க உலோகம் என்ற வகையில் கடைசியானது வெள்ளி தான். 

     சீனாவில் இன்னும் கதை சுவாரசியமாக இருக்கிறது. இப்பொழுது சீனாவில் வெள்ளி மீது முதலீட்டை மேற்கொள்வது மட்டுமின்றி, அதற்கு அந்நாட்டு குடிமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். சீனர்கள் திறமையான முதலீட்டாளர்கள். இதனால் விலை மதிப்பு மிக்க வெள்ளி மற்றும் தங்கம் போன்றவற்றில் அதிகமான முதலீடுகள் குவிய வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன.

     சீனாவில் ஏற்பட்டிருக்கும் இந்த வெள்ளியின் தேவைப்பாடு அதன் விலையில் குறிபிடத்தக்க தாகத்தை உண்டாக்கும் என்பதற்கு சில காரணங்கள் கீழ் வருமாறு :-

     தங்கம் முதலீட்டாளர்களை தன் வசம் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் இப்போது கவனம் வெள்ளி மீது திரும்பி இருப்பதால், பெரும்பாலான மக்கள், " அப்படி என்ன வெள்ளி ஒரு பெரிய முதலீடு வாய்ப்பாக இருக்கப் போகிறது ? ", என்று கேட்கின்றனர். 

     முதலாவதாக, சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் வெள்ளியின் அளவு மிகவும் குறைவு. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வெள்ளியானது சிதைக்கப்படுகிறது, மறு பயன்பாட்டிற்கு அவை கிடைப்பதில்லை.

     இதன் அர்த்தம், பெருமளவிலான தங்கம் மறுசுழற்சி மூலம் திரும்ப பயன்பட்டாலும் வெள்ளியைப் பொறுத்தவரை அப்படி இல்லை. உற்பத்தி, மின் மற்றும் மின்னணு, மருத்துவம் மற்றும் உணவு போன்ற பல்வேறு தொழிற்சாலைகளில் வெள்ளி பயன்படுகிறது. இதனாலேயே வெள்ளி அதிக அளவில் சிதைக்கப் படுகிறது.

     இருப்பினும் சுரங்கங்களில் வெள்ளி துரிதமாக  வெட்டி எடுக்கப் படுவதில்லை. அங்கு வெள்ளியின் இருப்பும் குறைவாகவே உள்ளது. இந்த எண்ணம் தான் வெள்ளியின் விலையை உயர்த்திக்  கொண்டே இருக்கிறது. 

     இக்கால முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் முதலீட்டை விற்று பணமாக மாற்றவும் எளிய வாய்ப்புகளை வெள்ளிக் கட்டிகள் அளிக்கின்றன. ' Hall mark ' முத்திரையுடன் கூடிய வெள்ளிக்கட்டிகள் ( Silver Bars ) அளவிலும் சுத்தத்திலும் கச்சிதமாக இருக்கும். இதனை விற்று பணமாக மாற்றுவது மிகவும் சுலபம்.

     வெள்ளி மீது முதலீடு செய்ய மற்றொரு வாய்ப்பு, அதனை சுரங்கங்களில் வெட்டி எடுக்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது தான். இவ்வாறு பங்குகளை வாங்குவதன் மூலம் அந்த நிறுவனத்தின் நிதிநிலை வலுவடைகிறது. இங்கு தாங்கள் வெள்ளி மீது நேரடியாக பணத்தைப் போடவில்லை, ஆனால் வெள்ளியின் விலை ஏறும் போது, உங்கள் பங்குகளின் விலையும் ஏறும். இதில் ஒரு சிக்கல் உள்ளது. இங்கு நீங்கள் மோசமான நிறுவனத்தைத் தேர்ந்து எடுக்க நேரிடலாம், அதனால் உங்கள் முதலீட்டின் செயல் பாடும் மோசமான நிலைக்கு போக வாய்ப்புள்ளது. ஆகவே கவனமாக நிறுவனங்களைத்  தேர்ந்தெடுங்கள்.

வெள்ளி மீதான முதலீட்டை மேற்கொண்டு செல்வம் சேர்த்திட 'முதலீடுகள்' வாழ்த்துகிறது!

முதலீடுகள் - க்காக சதீஷ் & பூபாலன் .


Tuesday, June 21, 2011

முதலீட்டு பாடங்கள் (பாடம் - 5)

கடன் பத்திரங்கள் [Bonds]:-
    

     
     நிறுவனங்கள் தனது நிதியை உயர்த்துவதற்காக கடன் பத்திரங்களை வெளியிடும். நிர்ணயக்கப்பட்ட வட்டியை ஈட்டித்தரும் இந்த கடன் பத்திரங்கள் ஒரு வருடத்திற்கு மேலான கால அளவை கொண்டதாகவே இருப்பவை.

     மத்திய மற்றும் மாநில அரசுகளும் பெருநிறுவனங்கள் மற்றும் பெரிய அமைப்புகளும் கடன் பத்திரங்களை விற்பனை செய்கின்றன. கடன் பத்திரம் என்பது குறிப்பிட்ட நாளன்று [முதிர்வு நாள்/maturity date] முதல் மற்றும் முதலுக்கு நிர்ணயக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வட்டியையும் திருப்பி தருவதாக கூறும் உத்திரவாதமாகும். 

     வங்கி வைப்புத் தொகை போல நிலையான/நிர்ணயக்கப்பட்ட வருவாயை ஈட்டக் கூடியவை.

     சராசரியாக 10-12% என்ற வட்டி விகிதத்தில் ஆண்டு வருமானத்தை இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கடன் பத்திரங்கள் மீதான முதலீடுகள் ஈட்டித்தருகின்றன.

முதலீடுகள் - க்காக சதீஷ் குமார் 
     

முதலீட்டு பாடங்கள் (பாடம் - 4) - பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளும் அவை ஈட்டித்தரும் வருவாய் விகிதங்களும்: (Different investment options and their current market rate of returns)



Saturday, June 18, 2011

பிராவிடண்ட் ஃபண்ட் - உங்களது சம்பளத்தில் PF எவ்வளவு பிடிக்கப்படுகிறது?

-பிராவிடண்ட் ஃபண்ட் பற்றிய ஒரு அலசல்.

     உடம்பில் தெம்பு இருக்கும் வரை உழைக்கிறீர்கள்; சம்பாதிக்கிறீர்கள்; சாப்பிடுகிறீர்கள். ஓய்ந்து போய் உட்காரும் காலத்துக்கு என்ன சேர்த்து வைக்கிறீர்கள்...? மாதச் சம்பளம் வாங்கும் நூறு பேர்களிடம் இந்த கேள்வியை கேட்டால், முக்கால்வாசிப் பேர்களிடம், " விக்கிற விலைவாசியில என்னத்தை சேர்த்து வைக்கிறது ?" என்கிற புலம்பல்தான் பதிலாகக் கிடைக்கும். இன்றல்ல, அறுபது ஆண்டுகளுக்கு முன்பும் இப்படிதான் இருந்தது. இதை உணர்ந்த அரசாங்கம், தொழிலாளர் மற்றும் ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்புக்காக கொண்டு வந்த திட்டம் தான் பிராவிடண்ட் ஃபண்ட் என்கிற தொழிலாளர் சேமநல நிதி. இது 1952 -ல் ஆரம்பிக்கப்பட்டது. 1971 முதல் ஓய்ஊதியத் திட்டத்தையும் இதனோடு சேர்த்து செயல்படுத்தி வருகிறது அரசாங்கம்.


எவ்வளவு பிடிப்பார்கள்?


     இப்போதெல்லாம் பல நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்த முதல் மாதமே பி.எஃப். பிடிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். பொதுவாக, ஊழியர்களின் அடிப்படை சம்பளம்(Basic Salary) மற்றும் அகவிலைப்படியில்(Allowances) 12%  பி.எஃப். ஆக பிடிக்கப்படும் . தனியார் நிறுவனங்களில் பணியாளரிடமிருந்து பிடிக்கப்படும் அதே அளவு தொகையை நிறுவனமும் போடும். இது தவிர, பணியாளர் விருப்பப்பட்டால் இன்னொரு 12% தொகையை கூடுதலாக பி.எஃப். கணக்கில் பிடிக்கச் சொல்லலாம். ஆனால், இந்த தொகைக்கு இணையாக நிறுவனம் எந்தத் தொகையும் செலுத்தாது. 

     தொழில் நிறுவனங்கள் அளிக்கும் 12 சதவிகிதத்தில் 8.33% தொழிலாளரின் குடும்ப ஓய்ஊதியத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும். ஊழியர்களின் பங்கான 12% மற்றும் தொழில் நிறுவனத்தின் பங்கான 3.5% (ஓய்ஊதியத்துக்குக் கழித்தது போக) ஊழியர்களின் சேமநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தத் தொகைக்கு தற்போது 9.5% வட்டி தரப்படுகிறது. இன்றைய தேதியில் 6,500 ரூபாய் வரையில் சம்பளம் வாங்குபவர்களுக்கு பி.எஃப். கட்டாயம் பிடிக்க வேண்டும் என்பது சட்டம்.

எப்போது பென்ஷன் கிடைக்கும்?
  • குறைந்த பட்சம் 10 வருடங்கள் பி.எஃப். பிடிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே பென்ஷன் கிடைக்கும். இல்லாத பட்சத்தில் குடும்ப ஓய்ஊதியக் கணக்கில் சேர்ந்திருக்கும் தொகையை குறிப்பிட்ட விகிதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
  • பணியில் இருந்து விலகும் போது பி.எஃப். பணத்தை முழுவதுமாக பெற்றுக் கொள்ளலாம்
  • பொதுவாக, 58 -வது வயதில் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது ஓய்ஊதியம் பெறலாம். அப்படி இல்லாமல், 10 வருடம் திட்டத்திலிருந்து 50 -வது வயதில் பணியில் இருந்து விலகினாலும் முன்கூட்டியே ஓய்ஊதியம் பெற்று கொள்ளும் வசதியும் உள்ளது. 58 -வது வயதில் வர இருக்கும் பென்ஷனில் வருடத்துக்கு 4% குறைத்துக் கொண்டு தான் பென்ஷன் பெறலாம்.
  • பணியில் இருக்கும் போது ஊனம் அடைந்து பணிபுரிய முடியாத நிலை ஏற்பட்டால் ஓய்ஊதியம் கிடைக்கும். இதற்கு வயது மற்றும் பணிக் கால வரம்பு ஏதும் இல்லை. 
  • இதில் உறுபினராக இருப்பவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் ஓய்ஊதியம் கிடைக்கும். இது கணவன் / மனைவிக்கு செல்லும். குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் ஓய்ஊதியம் வழங்கப்படும். இது கணவன் /மனைவியிடமே வழங்கப்படும். பிள்ளைகளுக்கான பென்ஷன் அவர்களின் 25  வயது வரை வழங்கப்படுகிறது. மணமான மகள்களுக்கும் 25 வயது வரை பென்ஷன் கிடைக்கும்.
  • கணவரோ, மனைவியோ மறுமணம் செய்து கொண்டால், ஆதரவற்றோர் ஓய்ஊதியமாக குழந்தைகளுக்கு அதிக ஓய்ஊதியம் வழங்கப்படுகிறது. 
  • பணி ஓய்வு பெறும் போது பென்ஷன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தொகையை போல் 100 மடங்கு வரை முன்பணமாக பெறும் வசதியும் உள்ளது. முன்பணம் பெற்றால் அந்த தொகை மற்றும் அதற்குரிய வட்டியை கழித்து விட்டு மீதி ஓய்ஊதியமாக வழங்கப்படும். ஓய்ஊதியதாரரின் மரணத்துக்குப் பிறகு நியமனதாரருக்கு ஓய்ஊதியம் செல்லும். கடைசி 12 மாதங்களில் வாங்கிய சம்பளம் மற்றும் குடும்ப ஓய்ஊதியத் திட்டத்திற்கு பணம் செலுத்திய காலம் போன்றவற்றின் அடிப்படையில் ஓய்ஊதியம் நிர்ணயக்கப்படுகிறது. தொழில் அதிபர்கள் ஓய்ஊதியத் தொகையை செலுத்தவில்லை என்றாலும் ஓய்ஊதியத்துக்கான உத்தரவாதத்தை அரசு அளிக்கிறது. பென்ஷனுக்கு அடிப்படை வரம்புக்கு உட்பட்டு வரி கட்ட வேண்டி இருக்கும்.

பி.எஃப். சான்றிதழ்!


     பத்தாண்டுக்கும் குறைவான பணிக் காலத்துடன் ஒரு நிறுவனத்திலிருந்து விலகும் போது, சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். வேறு ஏதாவது நிறுவனத்தில் சேரும்பொழுது இதைத் தொடர்ந்துக் கொள்ளலாம். இந்தச் சான்றிதழ் வைத்து இருக்கும் நபர் 58 வயது பூர்த்தியாகும் முன்பே மரணம் அடைந்துவிட்டால் அவரது குடுபத்தினருக்கு பணிக் காலத்தைக் கணக்கில் கொள்ளாமலேயே ஓய்ஊதியம் வழங்கப்படும்.

தொழிலாளர் காப்பிட்டு திட்டம் !  


     பி.எஃப் திட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். இதற்கு என தனியாக ஊழியரின் கணக்கில் பணம் எதுவும் பிடிப்படுவதில்லை. இதற்கான பங்களிப்பாக தொழிலதிபர்கள், ஊழியர்களின் மொத்தச் சம்பளத்தில் 0.5 சதவிகிதம் செலுத்த வேண்டும். இதன் மூலம் பணியில் இருக்கும் போது இறந்தால் அவரது குடும்பத்துக்கு 1,00,000 ரூபாய் வரை காப்பீடுத் தொகையாக வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு.. !

     மாற்றுத் திறனாளிகளை தனியார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வேலைக்கு எடுப்பதை ஊக்கப்படுத்த 2008 -ல் நடவடிக்கை எடுத்தது அரசு. அதாவது, மாற்று திறனாளிகளை வேலைக்கு எடுத்தால் தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பி.எஃப். சந்தா தொகையை மூன்று வருடங்களுக்கு அரசே செலுத்தும். இதற்காக 11 -ம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில்  (2007-12) ரூ-1,800 கோடியை ஒதுக்கீடு செய்தது மத்திய அரசாங்கம். 

வரிச் சலுகை !

     வருமானவரிப் பிரிவு 80 சி-ன் கீழ் ஒரு நிதி ஆண்டில் 1 லட்ச ரூபாய் வரைக்கும் பி.எஃப். முதலீட்டுக்கு வரிச்சலுகை இருக்கிறது.  பணி ஓய்வின் போது மொத்தமாக கிடைக்கும் தொகைக்கும் வரி இல்லை. 

வலைத்தளம்:- 

Employees' Provident Fund Organisation - http://www.epfindia.com/

     பி.எஃப். பற்றிய அடிப்படைத் தகவல்கள் அனைத்தையும் சொல்லிவிட்டோம். இனி இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவரவர் கடமை! உங்கள் மேலான கருத்துகளை தெரிவிக்கவும்!

முதலீடுகள்-க்காக  சதீஷ் குமார் & பூபாலன் 

Sunday, April 17, 2011

முதலீட்டு பாடங்கள் (பாடம் - 4)

பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளும் அவை ஈட்டித்தரும் வருவாய் விகிதங்களும்: (Different investment options and their current market rate of returns)

                  உங்கள் முன்னால் பல வகையான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.முதலீட்டில் உங்களால் எந்த அளவுவரை நஷ்டங்களை தாங்கிக் கொள்ள முடியும், சூழ்நிலைகள்,எவ்வளவு காலம் முதலீட்டை வைத்திருக்க முடியும் என்பன போன்ற பலவற்றை ஆராய்ந்த பின்னரே உங்களுக்கேற்ற முதலீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். சந்தையின் நிலையற்ற தன்மையை உங்களால் எதிர்கொள்ள முடியும் என்றால் பங்குகளை (Shares) வாங்கலாம். பங்கு சந்தையின் நிலையற்ற தன்மையை தாங்கள் எதிர்கொள்ள விரும்பவில்லை என்றால், கொஞ்சம் வருமானம் வந்தால் போதும் என்று தாங்கள் விரும்பினால், தாங்கள் உறுதியாக வருவாய் அளிக்கக் கூடிய ஈட்டு வைப்பு தொகையை (Fixed income deposit) கணக்கில் கொள்ளலாம்.

                 இருப்பினும் தாங்கள் ஒன்றை மறக்கக் கூடாது. ஒவ்வொரு முதலீடும் எவ்வளவு அபாயங்களைக் கொண்டுள்ளதோ அதே அளவு வருவாய் ஈட்டித்தர வல்லவை.

                 பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றிய சுருக்கமான முன்னோட்டத்தை கீழே எழுதியுள்ளேன்:

முதலீட்டு வாய்ப்புகள்:-

1. பங்குகள் [Equities]
2. கடன் பத்திரங்கள் [Bonds]
3. பரஸ்பர  நிதிகள் [Mutual Funds]
4. ஈட்டு வைப்புத் தொகை [Fixed Deposit] மற்றும் பல., 

பங்குகள் [Equities]:-

                  நிறுவனங்கள் புதிதாக சந்தையில் நுழையும் பொது அவற்றின் பங்குகளை IPO-Initial Public Offer எனப்படும் முதன்நிலை சந்தையில் (Primary Market) வாங்கலாம். பங்கு சந்தைகள் பங்குகளை பரிமாற்றிக் கொள்ளும் இடங்களாக (Exchanges) செயல்படுகின்றன. இவற்றை இரண்டாம் நிலை சந்தைகள் (Secondary markets) என அழைக்கப்படுகின்றன. இங்கு நாம் பங்குகளை வாங்கவும் விற்கவும் முடிகிறது.

                  சந்தையின் நிலையற்ற தன்மை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் வீழ்ச்சிகளின் அபாயங்களும் இரு விஷயங்களால் மட்டுபடுகின்றன. 

அவை,
1. நாட்டின் பொருளாதாரம் பொதுவாக மேல் நோக்கி செல்வது.
2. முதலீட்டை நீண்ட கால அடிப்படையில் மேற்கொள்வது.

இவ்வகை முதலீடு இரு வழிகளில் வருமானத்தை ஈட்டக் கூடியது.

1. லாபப் பங்கீடு (Dividend): நிறுவனத்தின் லாபத்தில் இருந்து அவ்வப்போது முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து வழங்கப்படுவது லாபப் பங்கீடு எனப்படும்.

2. பங்கின் சந்தை விலை அந்த நிறுவனத்தின் வளர்ச்சி அறிவிக்கப்படும் பொது அதற்கு ஏற்றார் போல் உயரும். இதன் மூலம் முதலீட்டாளர்களின் பணத்தின் மதிப்பும் உயரும். இதன் மூலம் முதலீட்டாளர்களின் பணத்தின் மதிப்பும் உயரும் (Capital Gain).

சராசரியாக இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பங்குகளின் மீதான முதலீடுகள் ஆண்டுக்கு 25% வருவாய் ஈட்டுகின்றன. பங்குகளை வாங்கி விற்கும் பொது துள்ளியமான முடிவுகளை எடுப்பதன் மூலம் ஆண்டுக்கு ஈட்டு வருமானமாக 40% கூட பெறமுடியும்.

அடுத்த Blog - ல் கடன் பத்திரங்களை [Bonds] பற்றி பார்ப்போம்! 


Tuesday, March 29, 2011

நண்பர்களே தங்கத்தில் முதலீடு செய்ய மறக்காதீர்கள்!


              
                    சமீபத்தில் Outlook Money Magazine-ல் தங்கத்தின் விலை தொடர்ந்து

உயர்ந்து வரும் நிலையில் நாம் இப்பொழுது இந்த உச்ச விலையில் தங்கத்தை

வாங்க வேண்டுமா? என்ற கேள்விக்கு 'ஆம்' என்று பதில் 

அளிக்கப்பட்டிருகிறது. இந்த பதிலை Graphic Story மூலமாக சிறப்பாக 

விவரிக்கபட்டிருகிறது! நான் உங்களுக்காக அந்த Graphic Story-ஐ scan செய்து 

வைத்திருக்கிறேன். கீழ் காணும் Pictures-ஐ save செய்து படிக்கவும்.

Please leave your comments! 





Ref: Outlook Money Magazine [March 24-April 06,2011].














Wednesday, January 26, 2011

முதலீட்டு பாடங்கள் (பாடம் - 3)

ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி அணுகுமுறை   (Disciplined Financial Approach)
        
           சேமிப்பில் ஒழுக்கத்தை கடைபிடித்தால் பலன்கள் பல. எல்லாவற்றிற்கும் முதல் முறை என்று உள்ளது அல்லவா? அது போலவே முதலீட்டிற்கும் உண்டு. நீங்க முதலீட்டை முதல் முறையாக துடங்கும் போது தேவைகளுக்கு போக மீதமுள்ள பணத்தை மட்டுமே பயன்படுத்துவது நல்லது. மாதந்தோறும் போதுமான அளவு பணத்தை சேமிக்கும் பழக்கம் இல்லையெனில், நீங்க முதலீட்டை துடங்க இன்னும் தயாராகவில்லை என்று தான் அர்த்தம்.

            கீழே நீங்க காணப்போகும் அறிவுரைகளை தெளிவாக புரிந்து கொண்டு முயன்ற அளவு பின்பற்றுங்க! புரியாததை என்கிட்ட மறக்காம கேட்டு தெரிஞ்சுகோங்க!

             1. மாத சம்பளத்தில் இருந்து 4-5 மாத சம்பளத்தை அவசர கால செலவுகளுக்காக சேமித்து வைக்க வேண்டும். இந்த சேமிப்பில் இருக்கும் பணத்தை முதலீடு செய்யக்கூடாது. கடனாக யாருக்கேனும் கொடுக்கவோ அல்லது நீண்ட கால வைப்பு தொகையாக போட்டு வைப்பதோ இல்லாமல் எளிதில் கிடைக்கும்படி வங்கிக்கணக்கு போன்ற இடங்களில் விட்டுவைப்பது நல்லது.
          
             2. மாத சம்பளத்தில் 30-35% சேமிக்க பழகிக்கொள்ளுங்கள். இந்த சேமிக்கும் பழக்கத்தை வழக்கமாக பின்பற்றி மாதந்தோறும் சேமிப்பை உயர்த்தவும் முயற்சி செய்ய வேண்டும்.

             3. மாத சேமிப்பை அதிகப்படுத்துவதற்கு தேவையற்ற மற்றும் அதிகபடியான செலவுகளை தவிர்த்துவிடுங்கள். இந்த செலவுகளை தவிர்த்து சேமிப்பதன் மூலம் உங்களது பணம் முதலீட்டிற்கு செல்லும் போது தாங்கள் மகிழ்ச்சி அடைவீர்.

            4. உங்களின் கல்யாண நாள் மற்றும் பிறந்த நாள் போன்ற முக்கிய நாட்களில் ஆடம்பர செலவுகளை குறைத்து மீதமாகும் பணத்தை கொண்டு அதிக எண்ணிக்கையில் பங்குகளை   (shares)  வாங்கி உங்கள் வாழ்க்கை துணைக்கு கல்யாண நாள் அல்லது பிறந்த நாள் பரிசாக கொடுத்து பாருங்கள்.

            5. உங்களது சேமிப்பை கொண்டு அதிக வட்டிக்கு வாங்கிய கடனை முதலில் அடைத்து விடுங்கள். பற்று அட்டை   (Credit Card debts - revolving credits)  மற்றும் வட்டிக் கடைகாரர்கள் மூலம் பெறும் கடன்கள் பெரும்பாலும் வருடத்திற்கு 24-36% வட்டியாக கொண்டுள்ளன. உங்களிடம் எவ்வளவு குறைந்த பணம் இருந்தாலும் அதன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டோ அல்லது பங்கு சந்தையில் முதலீடு செய்தோ அதனை பெருக்கிய பின் கடன்களை அடைத்து விடலாம் என்ற எண்ணம் முற்றிலும் முட்டாள்தனமாகும். உங்களிடம் போதுமான பணம் இல்லை என்றாலும் இருப்பதை கொண்டு கடன்களை சிறிதளவேனும் குறைக்க பாருங்கள்.

            6. ஓய்வு காலத் திட்டங்கள் சேமிப்பிற்கு சாலச் சிறந்தவை. ஓய்வு கால பலன்களில் ஒட்டுமொத்த நிதியை ஒரே காசோலையை அளிக்கும்   consolidated pay cheque  என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டாம். இதன் மூலம் தாங்கள் வேலைப் பார்க்கும் நிறுவனம் ஒவ்வொரு ஊழியருக்கும் கொடுக்கும் பெறும் பங்கை உங்களது ஓய்வுக் கால நிதியில் இழக்க நேரிடும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
நீங்க எப்போ முதலீடு செய்ய ஆரம்பிக்கணும்? (பாடம் - 2)
நீங்க ஏன் முதலீடு செய்யணும்? (பாடம் - 1)

Tuesday, January 18, 2011

முதலீட்டு பாடங்கள் (பாடம் - 2)

நீங்க எப்போ முதலீடு செய்ய ஆரம்பிக்கணும்?

           சீக்கிரமே ஆரம்பிச்சா லாபத்தை அதிகபடுத்தலாம். உங்களோட இளமை பருவத்திலேயே பங்கு சந்தைல முதலீட்டை ஆரம்பிக்கும் போது உங்க முதலீடு மேலும் வளர நிறைய காலம் (வருடங்கள்) கிடைக்குது, கூட்டு வட்டி (compound interest) கிடைச்சா முதலீட்டின் வருவாய் பெருகும் இல்லையா, அதே மாதிரி தான் பங்குகளின் வருவாயும் லாப பங்கீடுகளும் (earnings and dividends of shares) வருடா வருடம் தொடர்ந்து சேர்ந்துக் கொண்டே வரும் போது உங்களோட முதலீட்டின் வருவாய் பெருகும்.
        
           நீங்க மனசுல வைக்க வேண்டியது என்னனா, "நல்ல முதலீடுகளுக்கு அதிக வருடங்கள் கிடைச்சா அதிகமான வருவாய் கொடுக்கும்." 


           பங்கு சந்தையின் கணிக்க முடியாத போக்கை பார்க்கும் போது, ஆராய்ச்சிகளும் வரலாறுகளும் முதலீட்டாளர்களுக்கு மூன்று பொன்னான விதி முறைகளை பின்பற்ற கோருகின்றன.
           1. முதலீட்டை இளம் பருவத்திலேயே ஆரம்பிக்க வேண்டும்.
           2. முதலீட்டை ஒரு வழக்கமாக மேற்கொண்டு செயல் படுத்த வேண்டும்.
           3. முதலீட்டை நீண்டகால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

          குறுகிய காலத்தில் ஆதாயம் அடைய வேண்டுமென்று எண்ணுவோர் மிக சிறந்த விலையில் (at best price) பங்குகளை வாங்கிவிட்டால் சிக்கிரமே நல்ல லாபத்தில் விற்று விடலாம் என்று பங்குகள் மிக சிறந்த விலைக்கு வருவதற்காக பொறுமையாக பார்த்துகிட்டே இருப்பாங்க.

          இவ்வாறு பார்த்து கொண்டே இருந்தால், அதுவும் முன்னேறி கொண்டிருக்கும் சந்தையில் காத்திருந்தால் நம் நேரமும் காலமும் மிக எளிதாக வீணாகிவிடும்.

          மேலும் கூட்டு வட்டி (compound interest) மூலமாக மிகுந்த வருவாய் ஈட்டும் முதலீட்டை மேற்கொள்ள வேண்டிய காலத்தை தவற விடுவோம்.

கூட்டுப் பெருக்கத்தின் சக்தி - Power of Compounding!
          கூட்டு வட்டி (compound interest) மூலம் நமது பணத்தை பெருக்குவது கூட்டுப் பெருக்கம் (compounding) ஆகும். கூட்டுப் பெருக்கதின் சக்தியை (power of compounding) நம்புங்கள். கூட்டுப் பெருக்கம் என்பது வளர்ச்சி. முதலீட்டின் வருவாயை மறுமுதலீடு செய்து வளர்ச்சி காண்பது தான் கூட்டுப் பெருக்கம்.
        
          கூட்டுப் பெருக்கம் Snowball Effect கொண்டது. உங்களோட முதலீடு மட்டுமல்லாமல் முதலீடு ஈட்டித் தரும் வட்டியும் (interest) அல்லது லாபப் பங்கீடுகளும் (dividends) மறுமுதலீடு செய்யப்பட்டு காலடைவில் லாபம் ஈட்டித்தருவதால் கூட்டுப்பெருக்கம் Snowball Effect கொண்டது.

          இப்படிப்பட்ட கூட்டுப்பெருக்கதின் சக்தியை நானும் உணர்ந்ததால் முதலீட்டை இயன்ற அளவு விரைவாக மேற்கொள்ளும்படி எனது நண்பர்களுக்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன் (so friends start investing as soon as possible).

          வருடங்களை வீணடிக்காமல் முதலீட்டை துடங்கி தொடர்ச்சியாக அதனை மேற்கொண்டே  இருந்தால் உங்களாலும் பணத்தை அதிகமாக பெருக்க முடியும்.

           உங்களோட பணத்தை நீண்ட காலத்திற்கு நல்ல  முதலீட்டில் விட்டுவைத்தால், மேலும்! அதிக வட்டியும் அதற்கு கிடைத்தால் உங்க பணம் அதி விரைவாக வளரும். இதனால பங்குகள் மிகச் சிறந்த நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற கருவியாக இருக்கின்றன. நாட்டின் பொருளாதாரம் பொதுவாக மேல்நோக்கி செல்வதால் பங்குசந்தையின் நிலையற்ற தன்மையும் (share market volatility) வீழ்ச்சிகளின் அபாயங்களும் (risk of losses) மட்டுபடுகின்றன. குறுகிய கால முதலீடு செய்யாமல் நீண்ட கால முதலீடு செய்வதற்கு இதுவே காரணமாக இருக்கிறது.

          நல்ல முதலீடுகளை தேர்ந்தெடுத்து அதன் மூலம் அதிக வருவாய் பெற்றிட நீண்ட கால அடிப்படையில் (குறைந்தது 5 வருடங்கள்) முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். 

Friday, January 7, 2011

Shariah Stock Index - இஸ்லாமிய அன்பர்களுக்காக!

பாகம்-1

Shariah Stocks Index என்றால் என்ன?

           இஸ்லாமியர்களின் மத கோட்பாடு, Shariah, நிதி மற்றும் வர்த்தக செயல்பாடுகளில் கண்டிப்பான வழிமுறைகளை கொண்டுள்ளது.
           அரேபிய முதலீட்டளர்கள் 'பரிசுத்த' பங்குளில் மட்டுமே முதலீடு செய்கின்றனர். மது, புகையிலை, பன்றி இறைச்சி, ஆயுதங்கள், மரபுசார்ந்த நிதி சேவைகள் அளிக்கும் வங்கிகள் முற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், கேளிக்கை சினிமா மற்றும் விடுதிகள் ஆகிய எந்த ஒரு விஷயத்தில் ஈடுபடும் நிறுவனங்களிலும் அவர்கள் முதலீடு செய்வதில்லை.
           இவ்வாறு இந்தியாவின் 17.5 கோடி இஸ்லாமிய அன்பர்களும் வளைகுடா நாடுகளில் இருக்கும் Shariah முதலீட்டாளர்களும் இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள மும்பை பங்கு சந்தை கடந்த (December,2010) மாதம் 50 நிறுவனங்களை கொண்ட ஒரு பட்டியலின் குறியீட்டை 'BSE - Shariah Stocks Index' வெளியிட்டது.


List of Companies in BSE TASIS Shariah 50 (Islamic or Shariah Stock Index for Muslims)
  1. ABB
  2. ACC
  3. Alstom Projects
  4. Ambuja Cements
  5. Areva T&D
  6. Ashok Leyland
  7. Asian Paints
  8. Bajaj Auto
  9. BEML
  10. Bharti Airtel
  11. BHEL
  12. Castrol Bharat
  13. Cipla
  14. Colgate Palmolive
  15. Crompton Greav
  16. Cummins Bharat
  17. Dabur Bharat
  18. Dr Reddys Lab
  19. Exide Inds
  20. Gail Bharat
  21. Glaxosmithkl Cons
  22. Godrej Cons
  23. Grasim Inds
  24. Hero Honda
  25. Hindalco Inds
  26. Hindustan Copp
  27. Hindustan Unilever
  28. Lanco Infra
  29. Lupin
  30. Mahindra & Mahindra
  31. Mangalore Ref
  32. Maruti Suzuki
  33. Mcleod Russel
  34. Mphasis
  35. MRF
  36. Nestle Bharat
  37. ONGC
  38. Opto Circuits
  39. PTC Bharat
  40. RIL
  41. Siemens
  42. Sterling Intl
  43. Tata Global Beverages
  44. TCS
  45. Tech Mahindra
  46. Thermax
  47. Titan Inds
  48. Ultratech Cem
  49. Voltas
  50. Wipro
           இந்த குறியீட்டில் பட்டியலிடுவதற்கு Taqwaa Advisory and Shariah Investment Solutions(TASIS) என்ற அமைப்பு பங்குகளை தகுதி ஆய்வு செய்தது. பெரும்பாலான நிறுவனங்கள் கடன் வாங்கியும் கடன் வழங்கியும் இருக்கும் நிலையில் Shariah முதலீட்டிற்கு நிறுவனங்களை தேர்வு செய்ய சில வரையறைகளை நிர்ணயதினர்.
        
அதன்படி...
           1. நிறுவனம் தனது சந்தை மதிப்பில் 33% மேல் கடன் வைத்திருக்கக்கூடாது.
           2. நிறுவனம் தான் பிற நிறுவனங்களுக்கு கடனாக கொடுப்பதன் மூலமாக வட்டி வருமானங்கள் மொத்தம் தனது சந்தை மதிப்பில் 45% மேல் இருக்கக்கூடாது.
           3. நிறுவனம் குறைந்தது 25% நிதியை நிரந்தர சொத்துக்களாக வைத்திருக்க வேண்டும்.
        
           இவ்வாறாக ஒவ்வொரு நிறுவனத்தின் நிலையை ஆய்வு செய்து மேல் கூறப்பட்ட சதவிகிதங்களில் சின்ன வித்தியாசங்கள் இருப்பின் அவற்றை ஏற்றுக்கொண்டு Shariah முதலீடு மேற்கொள்ளபடுகிறது.
           இருப்பினும் எந்த அளவு வித்தியாசங்கள் இருக்கின்றன என ஆராய்ந்து அதே அளவில் தாங்கள் மேற்கொண்ட முதலீட்டின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தின் பங்கை ஜகாத் (zakaat - charity) கொடுத்து விடுகின்றனர்.
           இதன் மூலம் Shariah விதிமுறைக்கு உட்படாத சொத்துகளின் மீதான முதலீட்டின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தை "களை அறுத்து விடுகின்றனர்".
--------------------------------------------------^_^-------------------------------------------------------
அடுத்த பாகத்தில் மேலும் பார்போம்...

Tuesday, January 4, 2011

முதலீடுகள்! இப்பொழுது தமிழில்! (பாடம்-1)

முதலீடுகள்! (Investments!) - இப்பொழுது தமிழில்! (பாடம்-1)- இது நீங்க நிதிசார்ந்த (financial) அடிப்படையான விஷயங்களை மற்றும் பங்குளை (shares) பற்றியும் கற்றுக்கொள்ள ஒரு முயற்சி. மறக்காம  உங்க கருத்தை சொல்லீட்டு போங்க!

முதலில்...

நீங்க ஏன் முதலீடு செய்யணும்?
                   சுலபமா சொல்லனும்னா, உங்களோட பணத்தை பெருக்கி..
                      1) உயர்ந்து வரும் விலைவாசியை சமாளிக்கவும் மற்றும் 
                      2) செல்வத்தை பெருக்கவும் - உங்களோட பணத்தை முதலீடு செய்யணும்.

                   உங்களோட முதலீடு மூலமாக கிடைக்கும் வருவாய் விகிதம் (rate of return) விலைவாசி விகிதத்தை (rate of inflation) விட அதிகமாக இருந்தால் காலடைவில் ஒரு கணிசமான உபரி (surplus) செல்வத்தை உங்களுக்கு பெற்றுத்தரும்.

                  உங்களது பணம் பங்கு சந்தை (share market), பத்திரங்கள் (bond), பரஸ்பர நிதிகள் (mutual funds) அல்லது நீண்டகால வைப்பு தொகை (fixed deposit) ஆகிய முதலீடுகளில் எதில் முதலீடு செய்தாலும், இறுதியில் நாம் எதற்கு செல்வம் சேர்க்க வேண்டும் என்றால்..
                     1) ஓய்வு காலத்தை சுகமாக கழிக்க (retirement)
                     2) பிள்ளைகளின் கல்யாண செலவிற்கு (children's marriage)
                     3) பிள்ளைகளின் மேற்படிப்பிற்கு (children's college fees)
                     4) வாழ்க்கையை மேம்படுத்தி கொள்வதற்கு (living standard)
ஆகிய காரணங்களுக்காகத்தான்.

                   மேலும் உங்களது மாத சம்பளம் பெருகுவதை(salary increment) விட அதிகமான வேகத்தில் முதலீட்டின் வருவாய் (return on investment) பெருகுவதை காண்பது நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும். 
--------------------------------------------------------------^_^------------------------------------------------------------