Wednesday, January 26, 2011

முதலீட்டு பாடங்கள் (பாடம் - 3)

ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி அணுகுமுறை   (Disciplined Financial Approach)
        
           சேமிப்பில் ஒழுக்கத்தை கடைபிடித்தால் பலன்கள் பல. எல்லாவற்றிற்கும் முதல் முறை என்று உள்ளது அல்லவா? அது போலவே முதலீட்டிற்கும் உண்டு. நீங்க முதலீட்டை முதல் முறையாக துடங்கும் போது தேவைகளுக்கு போக மீதமுள்ள பணத்தை மட்டுமே பயன்படுத்துவது நல்லது. மாதந்தோறும் போதுமான அளவு பணத்தை சேமிக்கும் பழக்கம் இல்லையெனில், நீங்க முதலீட்டை துடங்க இன்னும் தயாராகவில்லை என்று தான் அர்த்தம்.

            கீழே நீங்க காணப்போகும் அறிவுரைகளை தெளிவாக புரிந்து கொண்டு முயன்ற அளவு பின்பற்றுங்க! புரியாததை என்கிட்ட மறக்காம கேட்டு தெரிஞ்சுகோங்க!

             1. மாத சம்பளத்தில் இருந்து 4-5 மாத சம்பளத்தை அவசர கால செலவுகளுக்காக சேமித்து வைக்க வேண்டும். இந்த சேமிப்பில் இருக்கும் பணத்தை முதலீடு செய்யக்கூடாது. கடனாக யாருக்கேனும் கொடுக்கவோ அல்லது நீண்ட கால வைப்பு தொகையாக போட்டு வைப்பதோ இல்லாமல் எளிதில் கிடைக்கும்படி வங்கிக்கணக்கு போன்ற இடங்களில் விட்டுவைப்பது நல்லது.
          
             2. மாத சம்பளத்தில் 30-35% சேமிக்க பழகிக்கொள்ளுங்கள். இந்த சேமிக்கும் பழக்கத்தை வழக்கமாக பின்பற்றி மாதந்தோறும் சேமிப்பை உயர்த்தவும் முயற்சி செய்ய வேண்டும்.

             3. மாத சேமிப்பை அதிகப்படுத்துவதற்கு தேவையற்ற மற்றும் அதிகபடியான செலவுகளை தவிர்த்துவிடுங்கள். இந்த செலவுகளை தவிர்த்து சேமிப்பதன் மூலம் உங்களது பணம் முதலீட்டிற்கு செல்லும் போது தாங்கள் மகிழ்ச்சி அடைவீர்.

            4. உங்களின் கல்யாண நாள் மற்றும் பிறந்த நாள் போன்ற முக்கிய நாட்களில் ஆடம்பர செலவுகளை குறைத்து மீதமாகும் பணத்தை கொண்டு அதிக எண்ணிக்கையில் பங்குகளை   (shares)  வாங்கி உங்கள் வாழ்க்கை துணைக்கு கல்யாண நாள் அல்லது பிறந்த நாள் பரிசாக கொடுத்து பாருங்கள்.

            5. உங்களது சேமிப்பை கொண்டு அதிக வட்டிக்கு வாங்கிய கடனை முதலில் அடைத்து விடுங்கள். பற்று அட்டை   (Credit Card debts - revolving credits)  மற்றும் வட்டிக் கடைகாரர்கள் மூலம் பெறும் கடன்கள் பெரும்பாலும் வருடத்திற்கு 24-36% வட்டியாக கொண்டுள்ளன. உங்களிடம் எவ்வளவு குறைந்த பணம் இருந்தாலும் அதன் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டோ அல்லது பங்கு சந்தையில் முதலீடு செய்தோ அதனை பெருக்கிய பின் கடன்களை அடைத்து விடலாம் என்ற எண்ணம் முற்றிலும் முட்டாள்தனமாகும். உங்களிடம் போதுமான பணம் இல்லை என்றாலும் இருப்பதை கொண்டு கடன்களை சிறிதளவேனும் குறைக்க பாருங்கள்.

            6. ஓய்வு காலத் திட்டங்கள் சேமிப்பிற்கு சாலச் சிறந்தவை. ஓய்வு கால பலன்களில் ஒட்டுமொத்த நிதியை ஒரே காசோலையை அளிக்கும்   consolidated pay cheque  என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டாம். இதன் மூலம் தாங்கள் வேலைப் பார்க்கும் நிறுவனம் ஒவ்வொரு ஊழியருக்கும் கொடுக்கும் பெறும் பங்கை உங்களது ஓய்வுக் கால நிதியில் இழக்க நேரிடும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
நீங்க எப்போ முதலீடு செய்ய ஆரம்பிக்கணும்? (பாடம் - 2)
நீங்க ஏன் முதலீடு செய்யணும்? (பாடம் - 1)

Tuesday, January 18, 2011

முதலீட்டு பாடங்கள் (பாடம் - 2)

நீங்க எப்போ முதலீடு செய்ய ஆரம்பிக்கணும்?

           சீக்கிரமே ஆரம்பிச்சா லாபத்தை அதிகபடுத்தலாம். உங்களோட இளமை பருவத்திலேயே பங்கு சந்தைல முதலீட்டை ஆரம்பிக்கும் போது உங்க முதலீடு மேலும் வளர நிறைய காலம் (வருடங்கள்) கிடைக்குது, கூட்டு வட்டி (compound interest) கிடைச்சா முதலீட்டின் வருவாய் பெருகும் இல்லையா, அதே மாதிரி தான் பங்குகளின் வருவாயும் லாப பங்கீடுகளும் (earnings and dividends of shares) வருடா வருடம் தொடர்ந்து சேர்ந்துக் கொண்டே வரும் போது உங்களோட முதலீட்டின் வருவாய் பெருகும்.
        
           நீங்க மனசுல வைக்க வேண்டியது என்னனா, "நல்ல முதலீடுகளுக்கு அதிக வருடங்கள் கிடைச்சா அதிகமான வருவாய் கொடுக்கும்." 


           பங்கு சந்தையின் கணிக்க முடியாத போக்கை பார்க்கும் போது, ஆராய்ச்சிகளும் வரலாறுகளும் முதலீட்டாளர்களுக்கு மூன்று பொன்னான விதி முறைகளை பின்பற்ற கோருகின்றன.
           1. முதலீட்டை இளம் பருவத்திலேயே ஆரம்பிக்க வேண்டும்.
           2. முதலீட்டை ஒரு வழக்கமாக மேற்கொண்டு செயல் படுத்த வேண்டும்.
           3. முதலீட்டை நீண்டகால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

          குறுகிய காலத்தில் ஆதாயம் அடைய வேண்டுமென்று எண்ணுவோர் மிக சிறந்த விலையில் (at best price) பங்குகளை வாங்கிவிட்டால் சிக்கிரமே நல்ல லாபத்தில் விற்று விடலாம் என்று பங்குகள் மிக சிறந்த விலைக்கு வருவதற்காக பொறுமையாக பார்த்துகிட்டே இருப்பாங்க.

          இவ்வாறு பார்த்து கொண்டே இருந்தால், அதுவும் முன்னேறி கொண்டிருக்கும் சந்தையில் காத்திருந்தால் நம் நேரமும் காலமும் மிக எளிதாக வீணாகிவிடும்.

          மேலும் கூட்டு வட்டி (compound interest) மூலமாக மிகுந்த வருவாய் ஈட்டும் முதலீட்டை மேற்கொள்ள வேண்டிய காலத்தை தவற விடுவோம்.

கூட்டுப் பெருக்கத்தின் சக்தி - Power of Compounding!
          கூட்டு வட்டி (compound interest) மூலம் நமது பணத்தை பெருக்குவது கூட்டுப் பெருக்கம் (compounding) ஆகும். கூட்டுப் பெருக்கதின் சக்தியை (power of compounding) நம்புங்கள். கூட்டுப் பெருக்கம் என்பது வளர்ச்சி. முதலீட்டின் வருவாயை மறுமுதலீடு செய்து வளர்ச்சி காண்பது தான் கூட்டுப் பெருக்கம்.
        
          கூட்டுப் பெருக்கம் Snowball Effect கொண்டது. உங்களோட முதலீடு மட்டுமல்லாமல் முதலீடு ஈட்டித் தரும் வட்டியும் (interest) அல்லது லாபப் பங்கீடுகளும் (dividends) மறுமுதலீடு செய்யப்பட்டு காலடைவில் லாபம் ஈட்டித்தருவதால் கூட்டுப்பெருக்கம் Snowball Effect கொண்டது.

          இப்படிப்பட்ட கூட்டுப்பெருக்கதின் சக்தியை நானும் உணர்ந்ததால் முதலீட்டை இயன்ற அளவு விரைவாக மேற்கொள்ளும்படி எனது நண்பர்களுக்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன் (so friends start investing as soon as possible).

          வருடங்களை வீணடிக்காமல் முதலீட்டை துடங்கி தொடர்ச்சியாக அதனை மேற்கொண்டே  இருந்தால் உங்களாலும் பணத்தை அதிகமாக பெருக்க முடியும்.

           உங்களோட பணத்தை நீண்ட காலத்திற்கு நல்ல  முதலீட்டில் விட்டுவைத்தால், மேலும்! அதிக வட்டியும் அதற்கு கிடைத்தால் உங்க பணம் அதி விரைவாக வளரும். இதனால பங்குகள் மிகச் சிறந்த நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற கருவியாக இருக்கின்றன. நாட்டின் பொருளாதாரம் பொதுவாக மேல்நோக்கி செல்வதால் பங்குசந்தையின் நிலையற்ற தன்மையும் (share market volatility) வீழ்ச்சிகளின் அபாயங்களும் (risk of losses) மட்டுபடுகின்றன. குறுகிய கால முதலீடு செய்யாமல் நீண்ட கால முதலீடு செய்வதற்கு இதுவே காரணமாக இருக்கிறது.

          நல்ல முதலீடுகளை தேர்ந்தெடுத்து அதன் மூலம் அதிக வருவாய் பெற்றிட நீண்ட கால அடிப்படையில் (குறைந்தது 5 வருடங்கள்) முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். 

Friday, January 7, 2011

Shariah Stock Index - இஸ்லாமிய அன்பர்களுக்காக!

பாகம்-1

Shariah Stocks Index என்றால் என்ன?

           இஸ்லாமியர்களின் மத கோட்பாடு, Shariah, நிதி மற்றும் வர்த்தக செயல்பாடுகளில் கண்டிப்பான வழிமுறைகளை கொண்டுள்ளது.
           அரேபிய முதலீட்டளர்கள் 'பரிசுத்த' பங்குளில் மட்டுமே முதலீடு செய்கின்றனர். மது, புகையிலை, பன்றி இறைச்சி, ஆயுதங்கள், மரபுசார்ந்த நிதி சேவைகள் அளிக்கும் வங்கிகள் முற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், கேளிக்கை சினிமா மற்றும் விடுதிகள் ஆகிய எந்த ஒரு விஷயத்தில் ஈடுபடும் நிறுவனங்களிலும் அவர்கள் முதலீடு செய்வதில்லை.
           இவ்வாறு இந்தியாவின் 17.5 கோடி இஸ்லாமிய அன்பர்களும் வளைகுடா நாடுகளில் இருக்கும் Shariah முதலீட்டாளர்களும் இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள மும்பை பங்கு சந்தை கடந்த (December,2010) மாதம் 50 நிறுவனங்களை கொண்ட ஒரு பட்டியலின் குறியீட்டை 'BSE - Shariah Stocks Index' வெளியிட்டது.


List of Companies in BSE TASIS Shariah 50 (Islamic or Shariah Stock Index for Muslims)
  1. ABB
  2. ACC
  3. Alstom Projects
  4. Ambuja Cements
  5. Areva T&D
  6. Ashok Leyland
  7. Asian Paints
  8. Bajaj Auto
  9. BEML
  10. Bharti Airtel
  11. BHEL
  12. Castrol Bharat
  13. Cipla
  14. Colgate Palmolive
  15. Crompton Greav
  16. Cummins Bharat
  17. Dabur Bharat
  18. Dr Reddys Lab
  19. Exide Inds
  20. Gail Bharat
  21. Glaxosmithkl Cons
  22. Godrej Cons
  23. Grasim Inds
  24. Hero Honda
  25. Hindalco Inds
  26. Hindustan Copp
  27. Hindustan Unilever
  28. Lanco Infra
  29. Lupin
  30. Mahindra & Mahindra
  31. Mangalore Ref
  32. Maruti Suzuki
  33. Mcleod Russel
  34. Mphasis
  35. MRF
  36. Nestle Bharat
  37. ONGC
  38. Opto Circuits
  39. PTC Bharat
  40. RIL
  41. Siemens
  42. Sterling Intl
  43. Tata Global Beverages
  44. TCS
  45. Tech Mahindra
  46. Thermax
  47. Titan Inds
  48. Ultratech Cem
  49. Voltas
  50. Wipro
           இந்த குறியீட்டில் பட்டியலிடுவதற்கு Taqwaa Advisory and Shariah Investment Solutions(TASIS) என்ற அமைப்பு பங்குகளை தகுதி ஆய்வு செய்தது. பெரும்பாலான நிறுவனங்கள் கடன் வாங்கியும் கடன் வழங்கியும் இருக்கும் நிலையில் Shariah முதலீட்டிற்கு நிறுவனங்களை தேர்வு செய்ய சில வரையறைகளை நிர்ணயதினர்.
        
அதன்படி...
           1. நிறுவனம் தனது சந்தை மதிப்பில் 33% மேல் கடன் வைத்திருக்கக்கூடாது.
           2. நிறுவனம் தான் பிற நிறுவனங்களுக்கு கடனாக கொடுப்பதன் மூலமாக வட்டி வருமானங்கள் மொத்தம் தனது சந்தை மதிப்பில் 45% மேல் இருக்கக்கூடாது.
           3. நிறுவனம் குறைந்தது 25% நிதியை நிரந்தர சொத்துக்களாக வைத்திருக்க வேண்டும்.
        
           இவ்வாறாக ஒவ்வொரு நிறுவனத்தின் நிலையை ஆய்வு செய்து மேல் கூறப்பட்ட சதவிகிதங்களில் சின்ன வித்தியாசங்கள் இருப்பின் அவற்றை ஏற்றுக்கொண்டு Shariah முதலீடு மேற்கொள்ளபடுகிறது.
           இருப்பினும் எந்த அளவு வித்தியாசங்கள் இருக்கின்றன என ஆராய்ந்து அதே அளவில் தாங்கள் மேற்கொண்ட முதலீட்டின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தின் பங்கை ஜகாத் (zakaat - charity) கொடுத்து விடுகின்றனர்.
           இதன் மூலம் Shariah விதிமுறைக்கு உட்படாத சொத்துகளின் மீதான முதலீட்டின் மூலம் கிடைக்கும் ஆதாயத்தை "களை அறுத்து விடுகின்றனர்".
--------------------------------------------------^_^-------------------------------------------------------
அடுத்த பாகத்தில் மேலும் பார்போம்...

Tuesday, January 4, 2011

முதலீடுகள்! இப்பொழுது தமிழில்! (பாடம்-1)

முதலீடுகள்! (Investments!) - இப்பொழுது தமிழில்! (பாடம்-1)- இது நீங்க நிதிசார்ந்த (financial) அடிப்படையான விஷயங்களை மற்றும் பங்குளை (shares) பற்றியும் கற்றுக்கொள்ள ஒரு முயற்சி. மறக்காம  உங்க கருத்தை சொல்லீட்டு போங்க!

முதலில்...

நீங்க ஏன் முதலீடு செய்யணும்?
                   சுலபமா சொல்லனும்னா, உங்களோட பணத்தை பெருக்கி..
                      1) உயர்ந்து வரும் விலைவாசியை சமாளிக்கவும் மற்றும் 
                      2) செல்வத்தை பெருக்கவும் - உங்களோட பணத்தை முதலீடு செய்யணும்.

                   உங்களோட முதலீடு மூலமாக கிடைக்கும் வருவாய் விகிதம் (rate of return) விலைவாசி விகிதத்தை (rate of inflation) விட அதிகமாக இருந்தால் காலடைவில் ஒரு கணிசமான உபரி (surplus) செல்வத்தை உங்களுக்கு பெற்றுத்தரும்.

                  உங்களது பணம் பங்கு சந்தை (share market), பத்திரங்கள் (bond), பரஸ்பர நிதிகள் (mutual funds) அல்லது நீண்டகால வைப்பு தொகை (fixed deposit) ஆகிய முதலீடுகளில் எதில் முதலீடு செய்தாலும், இறுதியில் நாம் எதற்கு செல்வம் சேர்க்க வேண்டும் என்றால்..
                     1) ஓய்வு காலத்தை சுகமாக கழிக்க (retirement)
                     2) பிள்ளைகளின் கல்யாண செலவிற்கு (children's marriage)
                     3) பிள்ளைகளின் மேற்படிப்பிற்கு (children's college fees)
                     4) வாழ்க்கையை மேம்படுத்தி கொள்வதற்கு (living standard)
ஆகிய காரணங்களுக்காகத்தான்.

                   மேலும் உங்களது மாத சம்பளம் பெருகுவதை(salary increment) விட அதிகமான வேகத்தில் முதலீட்டின் வருவாய் (return on investment) பெருகுவதை காண்பது நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும். 
--------------------------------------------------------------^_^------------------------------------------------------------