Silver-ல முதலீடு செய்யனும்னு யோசிச்சிங்களா?
இத்தனை வருடங்கள் இல்லாம இப்போது ஏன் வெள்ளி மீது முதலீடு செய்ய வேண்டும் என்று நீங்க கேட்டா, அதற்கு பதில் :-
சமீப காலமாக வெள்ளி மீதான முதலீடு ஆர்வம் வரலாறு காணாத அளவு பெருகியுள்ளது. அதாவது இந்திய ரூபாயின் அடிப்படையில் வெள்ளியின் விலை பன்மடங்கு ஏற்றம் கண்டு வருகிறது. ( இருப்பினும் அமெரிக்க டாலரின் அடிப்படையில் இல்லை). அதிக விலை ஏற்றங்கள் காணும் விலை மதிப்பு மிக்க உலோகம் என்ற வகையில் கடைசியானது வெள்ளி தான்.
சீனாவில் இன்னும் கதை சுவாரசியமாக இருக்கிறது. இப்பொழுது சீனாவில் வெள்ளி மீது முதலீட்டை மேற்கொள்வது மட்டுமின்றி, அதற்கு அந்நாட்டு குடிமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். சீனர்கள் திறமையான முதலீட்டாளர்கள். இதனால் விலை மதிப்பு மிக்க வெள்ளி மற்றும் தங்கம் போன்றவற்றில் அதிகமான முதலீடுகள் குவிய வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன.
சீனாவில் ஏற்பட்டிருக்கும் இந்த வெள்ளியின் தேவைப்பாடு அதன் விலையில் குறிபிடத்தக்க தாகத்தை உண்டாக்கும் என்பதற்கு சில காரணங்கள் கீழ் வருமாறு :-
தங்கம் முதலீட்டாளர்களை தன் வசம் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் இப்போது கவனம் வெள்ளி மீது திரும்பி இருப்பதால், பெரும்பாலான மக்கள், " அப்படி என்ன வெள்ளி ஒரு பெரிய முதலீடு வாய்ப்பாக இருக்கப் போகிறது ? ", என்று கேட்கின்றனர்.
முதலாவதாக, சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் வெள்ளியின் அளவு மிகவும் குறைவு. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் வெள்ளியானது சிதைக்கப்படுகிறது, மறு பயன்பாட்டிற்கு அவை கிடைப்பதில்லை.
இதன் அர்த்தம், பெருமளவிலான தங்கம் மறுசுழற்சி மூலம் திரும்ப பயன்பட்டாலும் வெள்ளியைப் பொறுத்தவரை அப்படி இல்லை. உற்பத்தி, மின் மற்றும் மின்னணு, மருத்துவம் மற்றும் உணவு போன்ற பல்வேறு தொழிற்சாலைகளில் வெள்ளி பயன்படுகிறது. இதனாலேயே வெள்ளி அதிக அளவில் சிதைக்கப் படுகிறது.
இருப்பினும் சுரங்கங்களில் வெள்ளி துரிதமாக வெட்டி எடுக்கப் படுவதில்லை. அங்கு வெள்ளியின் இருப்பும் குறைவாகவே உள்ளது. இந்த எண்ணம் தான் வெள்ளியின் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது.
இக்கால முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் முதலீட்டை விற்று பணமாக மாற்றவும் எளிய வாய்ப்புகளை வெள்ளிக் கட்டிகள் அளிக்கின்றன. ' Hall mark ' முத்திரையுடன் கூடிய வெள்ளிக்கட்டிகள் ( Silver Bars ) அளவிலும் சுத்தத்திலும் கச்சிதமாக இருக்கும். இதனை விற்று பணமாக மாற்றுவது மிகவும் சுலபம்.
வெள்ளி மீது முதலீடு செய்ய மற்றொரு வாய்ப்பு, அதனை சுரங்கங்களில் வெட்டி எடுக்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது தான். இவ்வாறு பங்குகளை வாங்குவதன் மூலம் அந்த நிறுவனத்தின் நிதிநிலை வலுவடைகிறது. இங்கு தாங்கள் வெள்ளி மீது நேரடியாக பணத்தைப் போடவில்லை, ஆனால் வெள்ளியின் விலை ஏறும் போது, உங்கள் பங்குகளின் விலையும் ஏறும். இதில் ஒரு சிக்கல் உள்ளது. இங்கு நீங்கள் மோசமான நிறுவனத்தைத் தேர்ந்து எடுக்க நேரிடலாம், அதனால் உங்கள் முதலீட்டின் செயல் பாடும் மோசமான நிலைக்கு போக வாய்ப்புள்ளது. ஆகவே கவனமாக நிறுவனங்களைத் தேர்ந்தெடுங்கள்.
வெள்ளி மீதான முதலீட்டை மேற்கொண்டு செல்வம் சேர்த்திட 'முதலீடுகள்' வாழ்த்துகிறது!
முதலீடுகள் - க்காக சதீஷ் & பூபாலன் .