நீங்க எப்போ முதலீடு செய்ய ஆரம்பிக்கணும்?
சீக்கிரமே ஆரம்பிச்சா லாபத்தை அதிகபடுத்தலாம். உங்களோட இளமை பருவத்திலேயே பங்கு சந்தைல முதலீட்டை ஆரம்பிக்கும் போது உங்க முதலீடு மேலும் வளர நிறைய காலம் (வருடங்கள்) கிடைக்குது, கூட்டு வட்டி (compound interest) கிடைச்சா முதலீட்டின் வருவாய் பெருகும் இல்லையா, அதே மாதிரி தான் பங்குகளின் வருவாயும் லாப பங்கீடுகளும் (earnings and dividends of shares) வருடா வருடம் தொடர்ந்து சேர்ந்துக் கொண்டே வரும் போது உங்களோட முதலீட்டின் வருவாய் பெருகும்.
நீங்க மனசுல வைக்க வேண்டியது என்னனா, "நல்ல முதலீடுகளுக்கு அதிக வருடங்கள் கிடைச்சா அதிகமான வருவாய் கொடுக்கும்."
பங்கு சந்தையின் கணிக்க முடியாத போக்கை பார்க்கும் போது, ஆராய்ச்சிகளும் வரலாறுகளும் முதலீட்டாளர்களுக்கு மூன்று பொன்னான விதி முறைகளை பின்பற்ற கோருகின்றன.
1. முதலீட்டை இளம் பருவத்திலேயே ஆரம்பிக்க வேண்டும்.
2. முதலீட்டை ஒரு வழக்கமாக மேற்கொண்டு செயல் படுத்த வேண்டும்.
3. முதலீட்டை நீண்டகால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
குறுகிய காலத்தில் ஆதாயம் அடைய வேண்டுமென்று எண்ணுவோர் மிக சிறந்த விலையில் (at best price) பங்குகளை வாங்கிவிட்டால் சிக்கிரமே நல்ல லாபத்தில் விற்று விடலாம் என்று பங்குகள் மிக சிறந்த விலைக்கு வருவதற்காக பொறுமையாக பார்த்துகிட்டே இருப்பாங்க.
இவ்வாறு பார்த்து கொண்டே இருந்தால், அதுவும் முன்னேறி கொண்டிருக்கும் சந்தையில் காத்திருந்தால் நம் நேரமும் காலமும் மிக எளிதாக வீணாகிவிடும்.
மேலும் கூட்டு வட்டி (compound interest) மூலமாக மிகுந்த வருவாய் ஈட்டும் முதலீட்டை மேற்கொள்ள வேண்டிய காலத்தை தவற விடுவோம்.
கூட்டுப் பெருக்கத்தின் சக்தி - Power of Compounding!
கூட்டு வட்டி (compound interest) மூலம் நமது பணத்தை பெருக்குவது கூட்டுப் பெருக்கம் (compounding) ஆகும். கூட்டுப் பெருக்கதின் சக்தியை (power of compounding) நம்புங்கள். கூட்டுப் பெருக்கம் என்பது வளர்ச்சி. முதலீட்டின் வருவாயை மறுமுதலீடு செய்து வளர்ச்சி காண்பது தான் கூட்டுப் பெருக்கம்.
கூட்டுப் பெருக்கம் Snowball Effect கொண்டது. உங்களோட முதலீடு மட்டுமல்லாமல் முதலீடு ஈட்டித் தரும் வட்டியும் (interest) அல்லது லாபப் பங்கீடுகளும் (dividends) மறுமுதலீடு செய்யப்பட்டு காலடைவில் லாபம் ஈட்டித்தருவதால் கூட்டுப்பெருக்கம் Snowball Effect கொண்டது.
இப்படிப்பட்ட கூட்டுப்பெருக்கதின் சக்தியை நானும் உணர்ந்ததால் முதலீட்டை இயன்ற அளவு விரைவாக மேற்கொள்ளும்படி எனது நண்பர்களுக்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கேன் (so friends start investing as soon as possible).
வருடங்களை வீணடிக்காமல் முதலீட்டை துடங்கி தொடர்ச்சியாக அதனை மேற்கொண்டே இருந்தால் உங்களாலும் பணத்தை அதிகமாக பெருக்க முடியும்.
உங்களோட பணத்தை நீண்ட காலத்திற்கு நல்ல முதலீட்டில் விட்டுவைத்தால், மேலும்! அதிக வட்டியும் அதற்கு கிடைத்தால் உங்க பணம் அதி விரைவாக வளரும். இதனால பங்குகள் மிகச் சிறந்த நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்ற கருவியாக இருக்கின்றன. நாட்டின் பொருளாதாரம் பொதுவாக மேல்நோக்கி செல்வதால் பங்குசந்தையின் நிலையற்ற தன்மையும் (share market volatility) வீழ்ச்சிகளின் அபாயங்களும் (risk of losses) மட்டுபடுகின்றன. குறுகிய கால முதலீடு செய்யாமல் நீண்ட கால முதலீடு செய்வதற்கு இதுவே காரணமாக இருக்கிறது.
நல்ல முதலீடுகளை தேர்ந்தெடுத்து அதன் மூலம் அதிக வருவாய் பெற்றிட நீண்ட கால அடிப்படையில் (குறைந்தது 5 வருடங்கள்) முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment