முதலில்...
நீங்க ஏன் முதலீடு செய்யணும்?
சுலபமா சொல்லனும்னா, உங்களோட பணத்தை பெருக்கி..
1) உயர்ந்து வரும் விலைவாசியை சமாளிக்கவும் மற்றும்
2) செல்வத்தை பெருக்கவும் - உங்களோட பணத்தை முதலீடு செய்யணும்.
உங்களோட முதலீடு மூலமாக கிடைக்கும் வருவாய் விகிதம் (rate of return) விலைவாசி விகிதத்தை (rate of inflation) விட அதிகமாக இருந்தால் காலடைவில் ஒரு கணிசமான உபரி (surplus) செல்வத்தை உங்களுக்கு பெற்றுத்தரும்.
உங்களது பணம் பங்கு சந்தை (share market), பத்திரங்கள் (bond), பரஸ்பர நிதிகள் (mutual funds) அல்லது நீண்டகால வைப்பு தொகை (fixed deposit) ஆகிய முதலீடுகளில் எதில் முதலீடு செய்தாலும், இறுதியில் நாம் எதற்கு செல்வம் சேர்க்க வேண்டும் என்றால்..
1) ஓய்வு காலத்தை சுகமாக கழிக்க (retirement)
2) பிள்ளைகளின் கல்யாண செலவிற்கு (children's marriage)
3) பிள்ளைகளின் மேற்படிப்பிற்கு (children's college fees)
4) வாழ்க்கையை மேம்படுத்தி கொள்வதற்கு (living standard)
ஆகிய காரணங்களுக்காகத்தான்.
மேலும் உங்களது மாத சம்பளம் பெருகுவதை(salary increment) விட அதிகமான வேகத்தில் முதலீட்டின் வருவாய் (return on investment) பெருகுவதை காண்பது நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும்.
--------------------------------------------------------------^_^------------------------------------------------------------
nice..keep writing
ReplyDelete@shafaat ahamed..ji im going thro all the papers and docs of Shariah Stock Index..will write about that in one or two days..thanks for your words "As a analyst, we can drill more and give more" it pushes me to do a lot
ReplyDelete@raja..thanks for comment ji..will write more as lot papers are in pipeline