Saturday, October 22, 2016

முதலீடு - உங்கள் திறமை மீது!


வணக்கம் முதலீட்டாளர்களே!

மாத சம்பளத்தை நம்பியிருக்கும் உங்களையும் என்னையும் போன்ற நடுத்தர வர்க்கத்திற்கு கையில் காசு மிஞ்சுவதே கொஞ்சம் கஷ்டம் தான். இப்படி இருக்கும் போது ஒரு சைடு இன்கம் அதுவும் நம் திறமை மூலம் ஒரு வருமானம் வந்தால்? வருமானம் மட்டுமா? பேரும் புகழும் கிடைத்தால்?

உங்கள் திறமை அறிந்து, அதில் முதலீடு செய்யுங்கள். இந்த முதலீடு மிகப் பெரிய லாபம் ஈட்டித்தரும். ஏனெனில் உங்கள் திறமை மீது உங்கள் ஈடுபாடு எப்பொழுதும் அதிகமாய் இருக்கும். அதனால் தங்கள் திறமை மீது முதலீடு செய்யும் போது, திறமை இன்னும் மேம்படும். தீட்டத்தீட்ட தான் வைரம் மின்னச் செய்யும் அல்லவா? நீங்களும் வைரமாய் மின்னும் போது உலகம் உங்கள் காலடியில்.

வாழ்த்துகள்!

No comments:

Post a Comment