மாறும் வட்டி விகிதத்துடன் கூடிய வீட்டு கடன்கள் இனி கூடுதல் கட்டணங்கள் இன்றி முன்முடிக்கலாம்! (Foreclosure charges to be withdrawn for home loans borrowed from banks!).
தாங்கள் தங்களிடம் உள்ள பங்குகளை பங்கு சந்தையில் விற்றோ, வேறு சொத்துக்களை விற்றோ அல்லது அலுவலகத்தில் Bonus பெற்றாலோ அந்த பெரிய தொகையை வைத்து முதலில் வீட்டுக் கடனை முடித்து விடலாம் என்று தான் நினைப்பீர்கள். அனால் நீங்கள் கடன் வாங்கிய வங்கிக்கு சென்று கேட்டால் மொத்த கடன் தொகையில் வட்டியை தவிர மீதமுள்ள முதல் எவ்வளவு இருக்கிறதோ அதில் 2% (Foreclosure/Prepayment charge) முன்முடிப்புக் கட்டணமாக செலுத்தவேண்டும் என்பார்கள். கடனாளிக்கு கடனை முடித்துக் கொள்ள இது பெரும் சங்கடமாகவே இருக்கும்.
நேற்று (06.09.2011) நடந்த வங்கிகளின் வாடிக்கையாளர் குறைத் தீர்க்கும் மாநாட்டில் (Banking Ombudsman Conference) வாடிக்கையாளர் சேவையை துரிதப்படுத்த பத்து செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன.
அதில் ஒன்று தான் முன்முடிப்புக் கட்டணத்தை மாறும் வட்டிவிகிதத்துடன் கூடிய வீட்டு கடன்களுக்கு ரத்து செய்ய வேண்டும் என்று RBI வங்கிகளுக்குக் கூறியிருப்பது.
RBI -யின் இந்த நன்செயளுக்கு முன்னோடியாய் இருந்தது Axis Bank தான். Axis Bank மற்ற வங்கிகளின் போட்டியை சமாளிக்க தனது floating rate home loan- ல் prepayment (foreclosure) charge- ஐ ரத்து (௦%) செய்ததே, RBI- யின் இந்த முடிவிற்கு வித்திட்டது என்றே சொல்லவேண்டும்.
இதில் RBI- யின் கருத்து:
"Foreclosure/Prepayment charges கடனாளிகளையும் மற்றும் வங்கிகளின் ஆக்கப்பூர்வமான போட்டியையும் பாதிக்கிறது".
ஆனால் நிலையான வட்டிவிகிதத்துடன் கூடிய வீட்டு கடன்களில் (Fixed Rate Home Loans) முன்முடிப்புக் கட்டணம் வசூலிப்பது தொடரும். அதனால் மாறும் வட்டிவிகிதத்தில் இருந்து நிலையான வட்டிவிகிதத்திற்கு வாடிக்கையாளர் இனி மாறும் போதும் (Interest Rate-Swap from Floating to Fixed Rate) முன்முடிப்பிற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
"முதலீடுகள்" கருத்து:
இன்னும் ஓரிரு ஆண்டுகளில் RBI -யின் வட்டிவிகிதங்கள் குறைய இருப்பதால், வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்க எண்ணிக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் கீழ் உள்ள வாய்ப்புகளை கவனிக்கவும்!
1. வீட்டுக் கடனை Floating rate -யின் அடிப்படையிலேயே வாங்கவும். தற்போதுள்ள அதிக வட்டிவிகிதங்களில் Fixed Rate -யில் கடனை வாங்கினால், ஓரிரு ஆண்டுகளில் வட்டிவிகிதல் குறையும் போதும் அதிக விகிதத்தில் வட்டியை கட்டவேண்டியிருக்கும்.
2. இப்பொழுது RBI வங்கிகளை Floating rate home loan -களில் முன்முடிப்பு செய்யும் போது Prepayment/Foreclosure charges வசூலிக்கக் கூடாது என்று சொல்லியிருப்பதால், இனி நீங்கள் Prepayment/Foreclosure அதாவது தவணைக் காலம் முடிவதற்கு முன்னரே கடனை முழுமையாக செலுத்தும் போது எந்த சங்கடங்களும் இருக்காது.
ICICI Bank வழங்கும் இரு வேறு வட்டி விகிதங்களைக் கொண்ட கடன் திட்டத்தை பார்க்கும் போது இந்த கடன் திட்டம் முதல் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு Fixed rate -ஆகவும் அதன் பிறகு Floating rate -ஆகவும் மாறிவிடுகிறது. இதனால் RBI வட்டிவிகிதங்களை குறைக்கும் காலங்களில் இந்த கடன் திட்டம் Floating rate -ஆக மாறி தானாக வட்டியைக் குறைத்து உங்களுக்கு பயனளிக்கும்.
HDFC Bank அளிக்கும் 'Fixed First' திட்டம் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு Fixed rate அளித்த பிறகு Floating rate -ஆக மாறக்கூடியது. இந்த திட்டம் 31,October'2011 வரை மட்டுமே கிடைக்கும்.
இருப்பினும் அவசரப்பட வேண்டாம். சாதாரண Floating rate திட்டத்தையே நீங்கள் நாடலாம்.
நன்கு ஆராய்ந்த பின் கடனைப் பெற்று உங்கள் கனவு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். "முதலீடுகள்" வாழ்த்துகிறது!
"முதலீடுகள்" -க்காக சதீஷ் குமார்


No comments:
Post a Comment